பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றம் - மார்க் ஜுக்கர்பெர்க் மாற்றிய காரணம் என்ன?
பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மெட்டா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்: முகநூல் இன்றி இல்லை உலகு என்று சொல்லும் அளவிற்கு பலகோடி மக்களின் வாழ்க்கையில் அவசியமாகி விட்டது பேஸ்புக். அந்த பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என்று மாற்றிவிட்டார் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க். அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகக் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இளைய தலைமுறையினர் உள்பட அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி, பயன்பாட்டு சாதனமாகவும், தொழில் செய்யும் இடமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள், மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா உள்பட பல நாடுகளில், பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் திடீரென மணிக்கணக்கில் முடங்கின. இதன் காரணமாக பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 52 ஆயிரத்து 217 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 44 ஆயிரத்து 351 கோடி ரூபாயில் இருந்து, 9 லட்சத்து 7 ஆயிரத்து 93 கோடி ரூபாயாக வீழ்ச்சிஅடைந்தது.
இந்த நிலையில் பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என்று மாற்றியுள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க். சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அதனைக் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார். அதேநேரம், தங்களது செயலிகள், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்று விளக்கமளித்தார்.
அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான மெட்டாவெர்ஸ் நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகக் கூறிய ஜுக்கர்பெர்க், இதில், அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பங்கு சந்தையில் பேஸ்புக்கின் குறியீடு எம்.வி.ஆர்.எஸ் என மாற்றப்படுவதாகவும், இது டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மெட்டா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications