கொடூரத்தின் உச்சம்.. ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய சைக்கோ.. ப்ளே ஸ்கூலில் 'அதிர்ச்சி'
நியூயார்க்: அமெரிக்காவில் ப்ளே ஸ்கூல் ஒன்றில் விடப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கொடூரமாக கடித்து வைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
பச்சைக் குழந்தை என்றும் பாராமல் கதற கதற அந்தக் குழந்தையை கடித்து குதறிய அந்த சைக்கோ நபர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பற்களின் தடங்களை கொண்டு தடயவியல் ஆய்வகத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதால் அந்த நபரை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

'ப்ளே ஸ்கூல்' விபரீதங்கள்
கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் உள்ள குழந்தைகளின் நிலைமை என்றுமே பரிதாபத்துக்கு உரியது தான். தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமல் உறவினர்கள் வீடுகளிலோ அல்லது தெரிந்தவர்களின் வீடுகளிலோ அந்தக் குழந்தைகள் வளரும். பணம் படைத்த சிலரோ தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வீட்டில் பணியாளர்களை அமர்த்துகின்றனர். மேலும் சிலரோ தங்கள் குழந்தைகளை அருகில் ப்ளே ஸ்கூல் அல்லது 'டே கேர்' (day care) மையத்தில் விட்டுச் செல்கின்றனர்.

ஒன்றரை வயது குழந்தை..
அவ்வாறு விடப்படும் குழந்தைகள் முறையாக பராமரிக்கவும், கவனிக்கவும் படுகிறார்களா என்பது சந்தேகம்தான். கவனிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. சில மையங்களில் இதுபோன்ற குழந்தைகள் அங்கிருக்கும் ஆசிரியைகள் அல்லது ஊழியர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் அலைஸ் பிரயான்ட். இவரும், இவரது கணவரும் வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் தங்களின் ஒன்றரை குழந்தையை ரோஸாலினை அருகில் உள்ள 'டே கேர்' மையத்தில் அவர்கள் சேர்த்துள்ளனர்.

நடவடிக்கையில் மாற்றம்
கடந்த 3 மாதங்களாக அந்த மையத்தில்தான் குழந்தை ரோஸாலின் காலை முதல் மாலை வரை பராமரிக்கப்படுகிறது. காலையில் வேலைக்கு செல்லும் அலைஸ் பிரயாண்ட் மாலை வீட்டுக்கு வரும் போது தனது குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார். இதனிடையே, இந்த 'டே கேர்' மையத்தில் சேர்த்தது முதலாக குழந்தை ரோஸாலினிடம் பல மாற்றங்கள் தென்பட்டன். எப்போதும் துருதுருவென இருக்கும் குழந்தை, அமைதியாக மாறியது. அதேபோல், தூக்கத்தில் இருந்து அடிக்கடி பயந்து எழுவதும் அழுவதுமாக குழந்தை இருந்துள்ளது.

கடித்து வைத்த சைக்கோ
எனினும், வேலை பிசியில் அலைஸ் பிராயன்டும், அவரது கணவரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல அலைஸ் பிராயன்ட் தனது குழந்தையை டே கேர் மையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் சட்டையை கழட்டிய போது அதன் முதுகுப் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மனித பல் தடங்கள் இருந்துள்ளன.

தீவிர விசாரணை
அந்த மையத்தில் இருந்த யாரோ ஒரு மர்மநபர் குழந்தையை இரக்கமில்லாமல் கடித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ந்து போன அலைஸ் பிராயன்டுக்கு ஒரு நிமிடம் மூர்ச்சையாகி விட்டார். வேலை வேலை என பணத்திற்கு பின்னால் ஓடி, தற்போது குழந்தையை சித்ரவதைக்கு உள்ளாக்கி விட்டோமே என நினைத்து அவர் கதறி அழுதார். பின்னர், இதுகுறித்து போலீஸாரிடம் அவர் புகார் அளித்தார். இதன்பேரில், அந்த 'டே கேர்' மையத்திற்கு சென் போலீஸார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். எனினும், குழந்தையை யார் கடித்தது என தெரியவரவில்லை. இதன் தொடர்ச்சியாக, தடயவியல் ஆய்வகத்தில் வைத்து அங்கிருந்த ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications