எனக்கு என் நேரம் வொர்க் அவுட் ஆகிடுச்சுடா! நிலாவிற்கு என்று இனி புதிய "டைம்".. ஆஹா புதுசா இருக்கே!
வரும் காலங்களில் இதை மற்ற உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்: பூமியில் இருப்பது போல நிலவிற்கு என்று தனியாக நேரத்தை உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கான முன்னெடுப்பை ஐரோப்பா ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
நேரம் என்பது இடம் சார்ந்தது. இடம் மாற மாற நேரமும் மாறும் என்பதே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் relativity theory எனப்படும் சார்புக் கொள்கை.
இந்த கோட்பாட்டின் படி இருப்பிடத்திற்கு ஏற்றபடி நேரம் மாறும். பூமி சூரியனை சுற்றும் நேரத்தை அடிப்படையாக வைத்தே நம்முடைய நேரம் கணக்கிடப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க பூமி சூரியனை சுற்றுவதை உலகம் முழுக்க இரவு பகல் வேறு வேறாக பிரிக்கப்பட்டு உள்ளது.

நிலா
நமக்கு ஒரு நேரம் இருந்தால் அமெரிக்காவிற்கு, ரஷ்யாவிற்கு வேறு ஒரு நேரம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இந்த நிலையில்தான் பூமியின் ஒரே துணைக்கோளான நிலாவிற்கும் ஒரு நேரம் இருக்க வேண்டும் என்ற ஐடியாவை முன்மொழிந்து உள்ளனர் ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். European Space Agency (ESA) மூலம் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி இப்போது நிலவிற்கு மக்கள் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அங்கே நிரந்தர பேஸ் அமைப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.

நேரம் வேண்டும்
இன்னும் சில ஆண்டுகளில் நிலவிற்கு சுற்றுலா பயணம் கூட தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஒரிஜின் போன்ற நிறுவனங்கள் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் நிலவிற்கு என்று தனியாக நேரம் இருக்க வேண்டும் என்று ஐரோப்பா விரும்புகிறது. நிலவில் ஏற்கனவே முழுமையாக தொலைத்தொடர்பு மற்றும் நேவிகேஷன் சிஸ்டத்தை உருவாக்க ஐரோப்பா முடிவு செய்துள்ளது. அதாவது பூமியில் எப்படி தொலைத்தொடர்பு உள்ளதோ அதேபோல். அதேபோல் பூமியில் எப்படி ரேகைகளை வைத்து நாம் பகுதிகளை பிரித்து, அதை வைத்து நேரத்தை கணக்கிடுகிறோமோ அதேபோல் நிலவின் பகுதிகளையும் ரேகைகளாக பிரிக்க ஐரோப்பா அறிவுறுத்தி உள்ளது.

அவசியம்
வரும் காலத்தில் இது மிகவும் அவசியப்படும். நிலவிற்கு அடிக்கடி மக்கள் செல்லும் நிலை வரும். நிலவிற்கு அடிக்கடி ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்களில் நிலவிற்கு என்று தனிப்பட்ட நேரம் தேவைப்படும். நிலவிற்கு எதிர்காலத்தில் அதிக அளவில் ராக்கெட்டுகள் செல்லும் நிலையில் நிலவில் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், நிலவிற்கு எந்த நேரத்திற்கு செல்கிறார்கள், எந்த நேரத்தில் நிலவில் தரையிறங்குகிறார்கள் என்பதை கணக்கிட வேண்டும் என்பதற்காக இந்த நேர கணக்கீடு முறையை கொண்டு வர வேண்டும் இன்றி ஐரோப்பா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவிற்கு என்று தனியாக நேரம் கிடையாது.

மாற்றப்படும்
தற்போது இந்தியாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது என்றால் அது இந்திய நேரடி கணக்கிடப்படும். ஒவ்வொரு சமயமும் எந்த நாடு ராக்கெட்டை ஏவுகிறதோ அந்த நாட்டின் நேரத்தை வைத்தே இதுவரை நேரத்தை கணக்கிடப்பட்டு வந்தது. இனிமேல் நிலவிற்கு என்ன திட்டம் செல்கிறது என்றாலும் அதை நிலவின் நேரத்தில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் உலக நாடுகள் பிரச்சனை இன்றி விண்வெளி பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று ஐரோப்பா தெரிவித்து உள்ளது. வரும் காலங்களில் இதை மற்ற உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications