தங்கத்தை விடுங்க! சின்ன தங்க அட்டையை வச்சு டிரம்ப் என்ன செஞ்சு இருக்கார் பாருங்க! இதுதான் எதிர்காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $3053.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை $3199.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் பாதுகாப்பான ரியல் பணம் தங்கம்தான். இதனால் மக்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள். இப்படி தங்கத்தின் விலை ஒரு பக்கம் டிரெண்டாகும் நிலையில் இன்னொரு பக்கம் தங்க அட்டையும் டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்காவில் கிட்டத்தட்ட கடந்த வாரம் ஒரே நாளில் 1,000 'தங்க அட்டைகள்' விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று அறிவித்துள்ளார். ஒவ்வொன்றும் $5 மில்லியன் மதிப்புடையது. டிரம்ப் கொண்டு வந்த இந்த திட்டம் அமெரிக்காவில் பெரிய ஹிட் அடித்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அது என்ன தங்க அட்டை என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்.

கோல்டு கார்டு விசா என்றால் என்ன?

அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.

More than the gold rate the rush of the purchase of the gold card increases day by day in USA

மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.

இனி முதலீட்டாளர்கள் விசா கிடையாது?

ஏற்கனவே அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் உள்ளது. இதை EB-5 விசாக்கள் என்று அழைப்பார்கள். EB-5 கள் 1990 இல் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை உருவாக்க கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.

இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது. அதோடு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்

அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோல்டு விசா இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் EB-5 விசாக்கள் மூலம் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே நிரந்தர விசா கிடைக்கும். அதாவது EB-5 விசாக்கள் வாங்க 8 கோடி ரூபாய் கட்டினால் போதும். ஆனால் இப்போது புதிய விதி காரணமாக 50 கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும்.

Take a Poll

இதனால் இந்தியர்கள் எளிதாக இந்த விசாவை வாங்க முடியாது. ஏற்கனவே EB-5 விசாக்கள் வாங்க திட்டமிட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு இல்லாமல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது. அப்படி சரிவதால் போக போக 5 மில்லியன் டாலர் மதிப்பு சரியும். இதனால் இந்தியர்கள் செலுத்த வேண்டிய தொகையின் இந்திய மதிப்பு தொடர்ந்து உயரும்.

யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்

கோல்டு விசா இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் EB-5 விசாக்கள் மூலம் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே நிரந்தர விசா கிடைக்கும். அதாவது EB-5 விசாக்கள் வாங்க 8 கோடி ரூபாய் கட்டினால் போதும். ஆனால் இப்போது புதிய விதி காரணமாக 50 கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+