எம்மா இல்ல எம்மம்மா.. மகனின் காதலிக்கு மாமியார் போட்ட 10 கண்டிசன்கள்.. இது புதுமாதிரி ‘மணல்கயிறு’
நியூயார்க்: மகனின் காதலிக்கு மாமியார் போட்ட நிபந்தனைகளின் பட்டியல் ஒன்று சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கு கூட தீர்வு வந்தாலும் வரும், ஆனால் இந்த மாமியார் மருமகள் சண்டைக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல் எல்லோர் வீட்டிலும் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால் உலக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான மெகா சீரியல்கள் மாமியார் மருமகள் சண்டையை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகளாக பார்த்தாலும் அந்த சீரியல்களுக்கு மவுசு குறைவதே இல்லை. அன்று முதல் இன்று வரை சீரியல்களின் சக்சஸ் சீக்ரெட் மாமியார் மருமகள் பிரச்சினையாகவே இருக்கிறது.

மாமியார் மருமகள் பிரச்சினை
இது இந்தியாவில் மட்டுமல்ல.. கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் மாமியார் மருமகள் பிரச்சினைகள் தொடரதான் செய்கின்றன. அப்படி ஒரு பிரச்சினை தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இது வித்தியாசமானது.

எம்மாவின் காதல்
அதாவது, சமூகவலைதளப் பயன்பாட்டாளர் எம்மா (Emma) என்பவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் தனது கதையை பகிர்ந்துள்ளார். அதில் தான் ஒரு பையனை காதலிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், அந்த பையனின் அம்மாவின் சமூகவலைதளப்பக்கத்தை யதேர்ச்சையாக பார்த்திருக்கிறார் எம்மா. அப்போது அவர் கண்ணில் பட்ட ஒரு பதிவு அவரை அதிர வைத்துள்ளது.

மாமியாரின் நிபந்தனைகள்
அதில், 'எனது மகனை காதலிக்கும் பெண்ணுக்கு எனது நிபந்தனைகள்' என ஒரு பெரிய பட்டியலே போட்டிகிறார் அந்த பையனின் தாய். அந்தப் பட்டியலில் முதல் நிபந்தனையே 'எனது மகன் உனக்கு (காதலி) எடிஎம் இயந்திரம் இல்லை', என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த எம்மா, 'ஐயோ யம்மா' என அலறி இருக்கிறார்.

எனக்கு பிடிக்கவில்லை என்றால்...
"எனது வீட்டிற்கு நீ (காதலி) வரும் போது பார்ப்பதற்கு மோசமானவளாக இருந்தால் அப்படியே துரத்தி விடுவேன், எனது மகனின் செல்போனின் ஏதாவது கசமுசா விவகாரங்களை பார்த்தால் அப்படியே உன்னை துரத்திவிடுவேன், எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றாலும் துரத்தி விடுவேன் என்பதை புரிந்துகொள்.

அவன் ஒரு அம்மா பையன்
அவன் ஒரு அம்மா பையன்... எனவே உங்களுக்கு திருமணம் ஆகும் வரை உனது கருத்துகள் எடுபடாது, அவனுக்கு நீ பொறுப்பில்லை.. எனவே அவனை மாற்ற முயற்சிக்க வேண்டாம்.. அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அவனை ஏற்றுக்கொள்.. இல்லையென்றால் உன்னை துரத்தி விடுவேன்", என அந்த நிபந்தனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எம்மாவின் அதிர்ச்சி
இதைப்பார்த்த எம்மா, அதிர்ச்சியில் உறைந்துபோய் நெட்டிசன்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். சும்மாவே கருத்து சொல்லும் நெட்டிசன்கள், தங்களிடம் கருத்து கேட்டால் சும்மாவிடுவார்களா?. திருமணம் செய்வதற்கு முன்பே அந்த பையனை டைவர்ஸ் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இனி எம்மா தான் முடிவு செய்ய வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications