2019ல் கூட பூமிக்கு வந்தது.. பென்டகன் வெளியிட்ட "யுஎஃப்ஓ" வீடியோ குறித்த புது தகவல்கள்.. ஏலியன்களா?

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முதல்முறையாக அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) வகை விமானங்களின் வீடியோக்கள் குறித்து முக்கிய கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது .

Recommended Video

    UFO video released by the Pentagon | America| UFO

    அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முதல்முறையாக அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) வகை விமானங்களின் வீடியோக்களை கடந்த மாதம் வெளியிட்டது. ஏலியன்கள் பறப்பதாக அஞ்சப்படும் unidentified flying objects எனப்படும் யுஎஃப்ஓ விமானங்களின் வீடியோக்கள் ஆகும் இது.

    பொதுவாக உலகம் முழுக்க யுஎஃப்ஓ எனப்படும் பறக்க கூடிய unidentified flying objects பொருட்களை பார்த்ததாக பல ஆயிரம் மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். நான் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தேன். என் தலைக்கு மேலே விசித்திரமான பறக்கும் தட்டு ஒன்று சென்றது என்று பலர் பேட்டி அளித்தது உண்டு.

    முதல்முறை இப்படி

    இன்னும் சிலர் இது தொடர்பாக வீடியோக்களை கூட வெளியிட்டு உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நாட்டு அரசும் இது போன்ற வீடியோக்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது கிடையாது. எந்த நாட்டு அரசும், எங்கள் வான் பகுதியில் பறக்கும் தட்டுகள் சென்றது என்று ஒப்புக்கொண்டது கிடையாது. ஆனால் முதல் முறையாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

    ஏலியன்கள் வாகனம்

    ஏலியன்கள் வாகனம்

    ஏலியன்கள் பறப்பதாக அஞ்சப்படும் unidentified flying objects எனப்படும் யுஎஃப்ஓ விமானங்களின் வீடியோக்கள் ஆகும் இது. சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வெளியான இந்த வீடியோக்களை தற்போது பென்டகன் அதிகாரபூர்வமாக வெளியிட்டு, அது உண்மைதான் என்று கூறியுள்ளது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது.

    வீடியோ எப்படி உள்ளது

    வீடியோ எப்படி உள்ளது

    2013ல் இருந்த விமானப்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளை செய்யும் போது இந்த யுஎஃப்ஓ விமானங்கள் அவர்களை கடந்து சென்றுள்ளது. தங்கள் விமானத்தில் இருக்கும் கேமரா மூலம் இதை அவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். தங்கள் விமானத்திற்கு மிக அருகில் வந்துவிட்டு பின் அந்த யுஎஃப்ஓ தங்களை கடந்து சென்றதாக அமெரிக்க விமானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோதான் தற்போது வெளியாகி உள்ளது.

    ஆராய்ச்சி செய்தனர்

    ஆராய்ச்சி செய்தனர்

    மிகுந்த ஆராய்ச்சிக்கு பின் வீடியோ உண்மை என்று தெரிந்த காரணத்தால் தற்போது பென்டகன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முக்கியமான விஷயங்கள் எதுவும் வெளியே வராது. மக்களுக்கு சிக்கல் எதுவும் ஏற்படாது என்பதால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த யுஎஃப்ஓ யாருக்கு சொந்தமானது, எப்படி வந்தது என்பது தொடர்பாக இன்னும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    கூடுதல் விவரம்

    கூடுதல் விவரம்

    இந்த வீடியோ குறித்து தற்போது கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது . அதன்படி எல்லா யுஎஃப்ஓ விமானங்களும் பசிபிக் பெருங்கடலுக்கு மேலேதான் பறந்துள்ளது. 2013ல் இருந்து 2015 அதிகமாக இந்த விமானங்கள் பறந்துள்ளது. மொத்தம் 7 முறை இந்த யுஎஃப்ஓ விமானம் இப்படி பறந்துள்ளது. 8வது முறை கடந்த 2019ல் இதேபோல் நடந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட W-72 கடல் பகுதியில் இந்த யுஎஃப்ஓ பறந்துள்ளது.

    செம வேகம்

    செம வேகம்

    கடந்த 2013 ஜூன் 27ம் தேதிதான் முதல்முறையாக இந்த யுஎஃப்ஓ தோன்றியுள்ளது. அப்போது இதன் தோற்றம் ஒரு ஏவுகணை அளவிற்கு இருந்துள்ளது. அமெரிக்கா போர் விமானம் ஒன்று இதை பார்த்துள்ளது. இது தனது பின்பக்கம் புகையை கக்கியபடி பறந்து சென்றுள்ளது. உலகில் இதற்கு முன் இது போன்ற வேகத்தில் செல்லும் விமானம் எதையும் எந்த நாடும் உருவாக்கவில்லை. அதனால் இது தொடர்பாக சந்தேகம் நிலவி வருகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

    கடைசியாக எப்போது

    கடைசியாக எப்போது

    அதன்பின் கடைசியாக 2019 பிப்ரவரி 13ல் இதேபோல் யுஎஃப்ஓ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பலூன் ஒன்று இதை கண்டுபிடித்து உள்ளது,. 27000 அடி உயரத்தில் இந்த யுஎஃப்ஓ பறந்துள்ளது. பலூனில் இருக்கும் கேமரா மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான விமானம், எப்படி வந்தது, யார் அனுப்பியது என்று எந்த விதமான விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+