அமெரிக்க இலக்கிய விழாவில் கத்தி குத்து- ஒரு கண் பார்வையை இழந்த சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
நியூயார்க்: அமெரிக்காவில் இலக்கிய விழாவில் ஒன்று சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின்( வயது 75) ஒரு கண் பார்வை பறிபோயிருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. 1981-ம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றார்.1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் வசனங்கள் புத்தகம், இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஈரான் மத தலைவர் அயதுல்லா கொமேனி, மரண தண்டனை விதித்து பத்வா ஆர்டர் பிறப்பித்திருந்தார்.
இந்தப் புத்தகத்துக்கு இந்தியாவும் தடை விதித்தது. பின்னர் பிரிட்டன் அரசின் பாதுகாப்புடன் சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் ருஷ்டி

15 இடங்களில் கத்தி குத்து
இந்நிலையில் அமெரிக்காவிவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலக்கிய விழா ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாதி மாடர் என்ற இளைஞர், சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார். மேடையிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சல்மான் ருஷ்டியின் உடலில் மொத்தம் 15 இடங்களில் கத்தி குத்தி விழுந்தது. இக்கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட ஹாதி மாடர், நியூஜெர்சியை சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டார்.

கண், கழுத்தில் கடும் காயம்
இத்தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் கண், கழுத்து பகுதிகளில் கடுமையாக காயம் ஏற்பட்டது. இதனால் சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே சல்மான் ருஷ்டியின் கண்பார்வை பறிபோகும் அச்சம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

கண்பார்வை பறிபோனது
தற்போது சல்மான் ருஷ்டியின் ஒரு கண் பார்வை பறிபோயிருக்கிறது; ஒரு கை செயல் இழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பெனின்சுலேவியா மருத்துவமனையில்தான் ருஷ்டி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சல்மான் ருஷ்டியின் கல்லீரலும் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சல்மானுக்கு பிரிட்டன் கவுரவம்
சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை சாத்தானின் வசனங்கள் நூலை மொழிபெயர்த்தவர் 1991-ம் ஆண்டில் கொல்லப்பட்டார். இதுவரை மொத்தம் 14 நாவல்களைப் படைத்துள்ளார் ருஷ்டி. 2007-ம் ஆண்டு இலக்கிய சேவைக்காக பிரிட்டன் மகாராணியால் சிறப்பிக்கப்பட்டவர் சல்மான் ருஷ்டி. 2007-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது பெரும் சர்ச்சையானதால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications