பாருங்க.. "மாஸ்க்" போடுறது வேலைக்கு ஆகாதாம்.. அதைவிடுங்க, விஞ்ஞானிகள் சொன்ன மேஜர் தகவல் என்ன தெரியுமா
இந்தியாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லையெனில் குறிப்பிட்ட தொகை அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது.
நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது பலனளிக்காது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 'Cochrane Library' எனும் ஆய்வு தளத்தில் இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா அச்சம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியது. இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்கள் தங்கள் நம்பிக்கொண்டிருந்த பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தனர். சூரிய வெளிச்சத்தில் இந்த வைரஸ் இறந்து விடும் என்று நம்பிய பலர் வெயிலில் நின்றுக்கொண்டிருந்தனர். அதேபோல வேப்பிலை இந்த வைரஸை ஒழித்துவிடும் என்றும் நம்பிக்கொண்டு வீடுகளில் வேப்பிலையை கட்டி மஞ்சள் நீரை தெளிக்க தொடங்கினர்.
இந்த வைரஸ் குறித்த புரிதல் அதிகம் இல்லாத காலத்தில் இதுபோன்று மக்கள் தங்கள் நம்பிக்கையின்பால் வழிநடத்தப்பட்டனர். ஆனால் விஞ்ஞானிகள் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக கூறினர். அதுதான் முககவசம் அணிதல். தொற்று பரவுவதை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். எனவே முகக்கவசம் அணிதல் உலகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது வரை மக்கள் முகக்கவசம் அணிவதை வழக்கமானமாக மாற்றியிருக்கின்றனர்.

ஆய்வுகள்
ஆனால், சர்வதேச அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த 12 ஆராய்ச்சியாளர்கள் முககவசம் அணிவதால் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க முடியாது, முகக்கவசம் இதில் பலனளிக்காது என்று ஆய்வு செய்து கூறியுள்ளனர். இவர்களின் ஆய்வு முடிவுகள் 'Cochrane Library' எனும் ஆய்வு தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த 12 ஆய்வாளர்கள் சுமார் 78 ஆய்வுகளை நடத்தி அதில் இந்த முடிவுகளை கூறியுள்ளனர். 'Cochrane Library' எனும் ஆய்வு தளத்தின் மதிப்பாசிரியர் இது குறித்து கூறுகையில், "கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஸ்க் போட்டுக்கொண்டால் இந்த வைரஸ் பரவுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.

மாஸ்க்
மேலும், "மாஸ்கில் பல வித்தியாசங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதில் சாதாரண சர்ஜிக்கல் மாஸ்க்குக்கும், என்95 மாஸ்க்குக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இது தொடர்பாக 8407 பேரிடம் 5 ஆய்வுகள் நடத்தப்பட்டன. இப்படி 78 ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல்களை நாங்கள் தெரிவிக்கின்றோம்" எனக் கூறியுள்ளார். இந்த ஆய்வுகள் முகக்கவசத்தை வேண்டாம் என்று கூறினாலும், இதற்கு முன்னர் வெவ்வேறு நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் முகக்கவசம் ஒரு சக்தி வாய்ந்த தடுப்பு கவசமாக இருக்கிறது என்று கூறியுள்ளன. குறிப்பாக "கூட்டமான இடங்களில் முககவசம் அணிவது நிச்சயம் நல்ல பலனை அளிக்கும். இதற்கான ஆய்வு முடிவுகள் எங்களிடம் இருக்கின்றன" என்று பிரவுன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜெனிஃபர் நுஸோ கூறியுள்ளார்.

பாதிப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 67.84 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்த அளவில் தொற்று பாதிப்பு விகிதத்தில் உலக அளவில் 2வது இடத்திலும், உயிரிழப்பு விகிதத்தில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை அடுத்து 3வது இடத்திலும் இருக்கிறது. நாடு முழுவதும் 5.30 லட்சம் பேர் கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதேபோல 44 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி
தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து 73% பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல 67.6% இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இந்தியாவிலும் ஐசிஎம்ஆர் தரப்பில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இது அமல்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் கூட வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications