போர் நிறுத்தமெல்லாம் சும்மா.. மீறிவிட்டார்கள்.. ஈரானை கடுமையாக தாக்க போகிறோம்.. இஸ்ரேல் உறுதிமொழி
டெஹ்ரான்: போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறையில் இல்லை.. அதனால் ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு போர் நிறுத்தத்தை கடுமையாக மீறியுள்ளதால், இஸ்ரேல் ராணுவம் பலமாக பதிலடி கொடுக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அயல் ஜமீர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பதிலடி
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி அயல் ஜமீர், போர் நிறுத்தத்தை ஈரான் கடுமையாக மீறியுள்ளதால், இஸ்ரேல் ராணுவம் பலமாக பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து IDF தனது எக்ஸ் தளத்தில், "ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நாங்கள் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்த பின்பும் கூட எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசின் போர்நிறுத்த மீறலுக்கு நாங்கள் பலமாக பதிலடி கொடுப்போம்.. விரைவில் நாங்கள் பதிலடி தாக்குவோம் என்று கூறி உள்ளார்.

முன்னதாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை ஏவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் அரசு ஊடகங்கள் மறுத்துள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
போர் நிறுத்தம்
ஈரானுடன் நடக்கும் போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது. நேற்றில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகள் வழியாக போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இதற்கான தூதுகளை இஸ்ரேல் விட்டு வருகிறது. அதோடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன என்றும், இதன் மூலம் "12 நாள் போர்" முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் எந்தவித போர் நிறுத்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 5 மணி நேரங்கள் கழித்து போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக ஈரான் ஒப்புக்கொண்டது.
டிரம்ப்பின் அறிக்கையை மறுத்த சிறிது நேரத்திலேயே, ஈரான் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஈரானுடன் நடக்கும் போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது. இஸ்ரேலின் இந்த தீவிரத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
இஸ்ரேல் செலவுகள்
ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறமை இஸ்ரேலுக்கு இருந்தாலும், பாதுகாப்புக்கான செலவுகள் அதிகரித்திருப்பது அந்நாட்டிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நாடு போரில் அடுத்த 1 வாரம் தாக்குபிடிப்பதே சிரமம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் அந்த நாடு போரை நிறுத்த தீவிரமாக முயல காரணம்.
ஏவுகணையை இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ஏறக்குறைய 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. ஒரு இரவிற்கு மட்டும் இஸ்ரேலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 285 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இஸ்ரேல் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுவே ஈரான் எப்படியாவது போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முயல்வதற்கு காரணம் ஆகும்.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications