Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏய் ஏய்.. 85 வயது தாத்தாவை காதலித்து மணந்த 24 வயது "மிராக்கிள்".. காரணம் கேட்டால் ஆடிப்போயிடுவீங்க

85 வயது தாத்தாவை 24 வயது இளம்பெண் விழுந்து விழுந்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 85 வயது மாப்பிள்ளையை விழுந்து விழுந்து காதலித்து கொண்டிருக்கிறார் 24 வயது இளம்பெண் ஒருவர்.. தன்னுடைய காதல் குறித்து விலாவரியாக செய்தியாளர்களிடமும் பூரித்து சொல்லி உள்ளார்.. இந்த சம்பவம்தான் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

காதல் எல்லா காலகட்டங்களிலும் புதிதாகவே பிறந்து கொண்டிருக்கிறது.. காதலுக்கு கண்ணில்லை.. வயதுமில்லை.. அழகுமில்லை.. என்றெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவைதான்...

ஆனாலும், 50 வயதுக்கு மேல், வயது வித்தியாசம் இருப்பவரை திருமணம் செய்து கொண்டு மிச்சமிருக்கும் வாழ்நாளை அவருடன் வாழ விரும்புவது அபூர்வமான விஷயம்.

யூஸர்ஸ்

யூஸர்ஸ்

சமீபத்தில் ஒரு விநோத சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணுக்கு 23 வயதுதான்.. ஆனால், 71 வயதான ஒரு தாத்தாவை கல்யாணம் செய்ய ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.. ரெட்டிட் என்ற சோஷியல் மீடியாவில் தன் விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.. ஆனால் ஒரு சில விஷயங்களால் முடிவெடுக்க குழப்பமாக இருப்பதால், யூசர்கள் தனக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்... இந்த செய்தியை மிரர் பத்திரிகையும் அப்போது வெளியிட்டிருந்தது...

ரிலேஷன்ஷிப்

ரிலேஷன்ஷிப்

இந்த தாத்தாவும், அந்த பெண்ணும் 2 வருடங்கள் ஒன்றாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்களாம்.. அந்த நேரத்தில், தாத்தாவை அதாவது அவரது முதிர்ந்த காதலனை அக்கறையாகவும், அன்பாகவும், கவனித்து கொண்டு வந்தாராம் அந்த பெண்.. அப்போதுதான், தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று தாத்தா, அந்த பெண்ணை கேட்டாராம். 2 வருடம் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, ஒருவேளை கல்யாணம் செய்து கொண்டால் பிரச்சனை வந்துவிடுமோ? என்று அந்த பெண்ணுக்கு ஒரு குழப்பம் வந்துள்ளது..

சலவைக்கடை

சலவைக்கடை

அதனால்தான் சோஷியல் மீடியாவில் ஐடியா தருமாறு உதவி கேட்டிருந்தார்.. இதற்கான விளக்கத்தையும், காரணத்தையும் அந்த பெண் கூறியிருந்த நிலையில், அந்த செய்தி பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. இப்போது ஒரு பெண், அதேபோல வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவை சேர்ந்தவர் அவர்.. 24 வயதாகிறது. அந்த பெண்ணின் பெயர் மிராக்கிள் போக்.. இவர் கடந்த 2019ம் ஆண்டு, ஒரு சலவைக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மிராக்கிள்

மிராக்கிள்

அப்போதுதான் சார்லஸ் என்பவரை மிராக்கிள் சந்தித்தார்.. சார்லஸுக்கு 85 வயதாகிறது.. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனர்... இருவருக்கும் 61 வயது வித்தியாசம்.. அதாவது மிராக்கிளின் தாத்தாவைவிட, சார்லஸ் 10 வயது மூத்தவராம்.. 2020ம் ஆண்டு, தன்னுடைய காதலை சார்லஸ் மிராக்கிளிடம் சொல்லி உள்ளார்.. மிராக்கிளும் உடனே இதற்கு ஓகே சொல்லிவிட்டார்.. அதன்படி, கடந்த கோடையில் 2 பேரும் திருமணம் செய்துகொண்டனர்... தன்னுடைய 85 வயது கணவன் குறித்து மிராக்கிள் செய்தியாளர்களிடம் சொல்லும்போதே அவரது கண்ணில் மகிழ்ச்சியும், குதூகலமும் தென்படுகிறது

ஸ்மார்ட் லுக்

ஸ்மார்ட் லுக்

"எங்கள் உறவுக்கு என் குடும்பம் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவாக இருந்து வருகிறது. நாங்கள் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோதுதான், எங்கள் பிறந்த தேதியை கண்டுபிடித்தேன்.. அவர் 1937-ல் பிறந்திருக்கிறார்.. நான் அவருடைய வயதைக் குறிப்பிடவில்லை... அது எப்படி இருந்தது என்பதைப் பார்க்க விரும்பினோம்... அவர் 100 அல்லது 55 வயதாக இருந்தாலும் எனக்கு அதை பற்றி துளியும் கவலையில்லை.. அவருக்காகவே நான் அவரை விரும்புகிறேன்... அவர் மிகவும் அழகாக இருக்கிறார்.. அதனால் அவருக்கு வயது 60 அல்லது 70 இருக்கலாம் என்று நான் அப்போது நினைத்தேன். ஆனால் எப்போதும் காலையில் சீக்கிரமாக எழுந்து சுறுசுறுப்பாக இருப்பார்" என்று பூரித்து சொல்கிறார் மிராக்கிள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+