எலான் மஸ்க்கின் அஸ்திவாரமே ஆடிப்போய்டுச்சே.. கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினாரு.. பாருங்க என்ன ஆச்சுன்னு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: டெஸ்லா நிறுவனத்தின் ஷேர்கள் மீண்டும் சரிய தொடங்கி உள்ளன. எதிர்பார்க்காத அளவிற்கு மோசமான நிலையை நோக்கி டெஸ்லா நிறுவன பங்குகள் செல்ல தொடங்கி உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 6 சதவிகிதம் பங்குகளை டெஸ்லா இழந்து உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு பங்கிற்கு 15 டாலர்கள் சரிந்து உள்ளது. 245ல் இருந்த டெஸ்லா பங்குகள் விலை 230ஐ நெருங்கி வருகிறது. இதனால் டெஸ்லா நிறுவனம் பல லட்சம் டாலர்கள் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

டெஸ்லா சரிவு

டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கடுமையான நிதி இழப்பை சந்தித்துள்ளார். அரசியலில் அவர் கவனிக்கப்பட்டாலும்.. பிஸ்னஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எல்லாம் வைத்து கூட டெஸ்லா நிறுவனத்திற்கு விளம்பரம் தேடினார் மஸ்க். இதற்காக வெள்ளை மாளிகையில் கூட டெஸ்லா கார் அணிவகுக்கப்பட்டது. ஆனால் அப்படியும் கூட டெஸ்லா நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.

Tesla chief Elon Musk loses Billion of Dollars everyday in Market Share loss

எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.

அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

டெஸ்லா சரிவு

அரசியலில் ஒரு பக்கம் கெத்து காட்டினாலும் இன்னொரு பக்கம் பிஸ்னஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளார். டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கடுமையான நிதி இழப்பை சந்தித்துள்ளார். அரசியலில் அவர் கவனிக்கப்பட்டாலும்.. பிஸ்னஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் டெஸ்லா நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டல் 1.5 ட்ரில்லியன் டாலர் ஆகும். அப்போது ஷேர் விலை 479.86 டாலராக இருந்தது. அப்போது எலான் மஸ்க் சொத்து மதிப்பு 464 பில்லியன் டாலர். கடந்த 4 மாதங்களில் இந்த சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலர்கள் சரிந்து உள்ளது. இப்போது அவரின் சொத்து மதிப்பு 319 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்திய மதிப்பு படி ரூ.12 லட்சம் கோடி இவர் இழந்துள்ளார். ஆனால் இப்போதும் இவர்தான் உலகின் நம்பர் 1 பணக்காரர். 122 நாடுகளின் தனிப்பட்ட மொத்த உள்நாட்டு ஜிடிபி உற்பத்தியை விட இவர் இழந்த $145 பில்லியன் அதிகமாகும், இது 2025-26 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இவர் கடந்த 4 மாதங்களில் இழந்து உள்ளார். நாசாவின் ஆண்டு பட்ஜெட்டை விட சுமார் ஆறு மடங்கு அதிகம் இது.

காரணம் டிரம்ப்

சமீபத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பாரம்பரிய எண்ணெய்களை எடுக்கும் வகையில் அமெரிக்க அரசின் கொள்கையை மாற்றினார். அதாவது இவி வாகனங்களுக்கு பதிலாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பாரம்பரிய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கொள்கைகளை மாற்றினார். அப்போது தொடங்கிய எலான் மஸ்க்கின் டெஸ்லா சரிவு தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இவி வாகனங்கள் அமெரிக்காவில் வேகமாக சரிவு சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+