நோ.. நோ.. முடிவுரை எழுதாதீங்க! நாங்க எங்கேயும் போகலை.. விளக்கமளித்த கார்ட்டூன் நெட்வொர்க்
நியூயார்க்: அமெரிக்காவின் 'வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி' நிறுவனத்திற்கு சொந்தமான 'கார்ட்டூன் நெட்வொர்க்' சேனல் மூடப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனல், தற்போது உள்ள 90'ஸ் கிட்ஸ்கள், 2K கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சேனலாகும்.
ஏற்கெனவே சேனலிலிருந்து அனிமேஷன் பிரிவை சேர்ந்த 82 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்ட நிலையில் சேனலை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்துடன் இணைக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின.

மூடுவிழா
ஒவ்வொரு மனிதனும், தனது பால்ய பருவத்தில் எதை பார்க்கிறானோ, எங்கு இருக்கிறானோ, எதை அனுபவிக்கிறானோ அதுவாகத்தான் வாழ்நாள் முழுவதும் அவன் வளர்கிறான். அவனுடைய சிந்தனைகளில் இந்த விஷயங்கள் ஆழ பதிந்திருக்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இருக்க இந்த வளரிளம் பருவத்தில் மிகச்சிறந்த நினைவுகளை கொடுத்த 'கார்டூன் நெட்வொர்க்' (cartoon network) எனும் சேனல் மூடுவிழாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின.

90's கிட்ஸ்
சுமார் 30 ஆண்டுகளாக குழந்தைகளை மகிழ்வித்து வரும் இந்த சேனலிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 82 அனிமேஷன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சேனலை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியுடன் இணைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகின. இதனால் சேனல் முற்றிலும் மூடப்படுவதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் 90'ஸ் கிட்ஸ்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து 'RIP CN' எனும் ஹாஷ் டேகை ட்ரென்ட் செய்தனர்.

தொடர்கள்
1992ம் ஆண்டு இந்த சேனல் தொடங்கப்பட்டாலும் 1994ம் ஆண்டுதான் இதில் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டன. அப்படி முதன் முறையாக அறிமுகமானதுதான் 'Space Ghost Coast to Coast' எனும் தொடர். இதனையடுத்து, Dexter's Laboratory, Johnny Bravo, Cow and Chicken, I Am Weasel, The Powerpuff Girls, Ed, Edd n Eddy, and Courage the Cowardly Dog என பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டன. இது அதிரடியான வெற்றியை கொடுத்ததையடுத்து வார்னர் பிரதர்ஸ் மற்றும் நியூ லைன் சினிமாவின் சில திரைப்படங்களும் திரையிடப்பட்டன.

புதுப்பொலிவுடன்
இதற்கெல்லாம் ராஜாவாக இருந்தது BEN 10, TOM AND JERRY போன்ற தொடர்கள்தான். இவ்வாறு உலகில் உள்ள ஒவ்வொரு சிறார்களின் வாழ்விலும் பிரகாசமாக நீங்கா இடம் பிடித்த cartoon network இனி இயங்காது என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்த சர்ச்சைக்கு கார்டூன் நெட்வொர்க் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாங்கள் எங்களது சேவையை முடித்துக்கொள்ளவில்லை எனவும், எங்களுக்கு 30 வயதாகிறது என்றும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது.
மேலும், நாங்கள் எங்கும் செல்லவில்லை. புதுமையான, வித்தியாசமான காட்டூன்கள் விரைவில் உங்கள் வீடு தேடி வரும் என்றும் CN விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து 'RIP CN' எனும் சர்ச்சைக்கு சேனல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications