அமெரிக்காவை அலற விட்ட நபர்.. விமானத்தை திருடி வால்மார்ட் மீது மோதுவதாக மிரட்டல்.. கடைசியில் ட்விஸ்ட்
நியூயார்க்: அமெரிக்காவின் மிசிசிப்பி நகரத்தில் மர்ம நபர் ஒருவர் விமானத்தை திருடி அதை வால்மார்ட் கட்டடத்தின் மீது மோதவிடுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரம் மீது மோதியதில் ஏறத்தாழ 3,000 வரை உயிரிழந்த நிலையில், இந்த அச்சுறுத்தல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் விமானியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த விமானம் சுமார் 5 மணி நேரம் வரை சுற்றி திரிந்துள்ளது.

விமானம் திருட்டு
அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பியில் உள்ள டுபெலோ நகரில் விமானம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திருடப்பட்ட விமானம் வேறு எங்கும் கொண்டு செல்லப்படாமல், அதை வால்மார்ட் கடையின் மீது மோதவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே இதுபோன்ற விமான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள அனுபவம் அமெரிக்காவுக்கு இருக்கிறது என்பதால் இந்த சம்பவத்தை கவனமாக காவல்துறையினர் கையாள தொடங்கினர்.

பதற்றம்
திருடப்பட்டது பீச்கிராஃப்ட் கிங் ஏர் 90 ரக விமானம் இது சுமார் ரூ.13 கோடி மதிப்பிலானது என சொல்லப்படுகிறது. இந்த விமானத்தை மர்மநபர் 5 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க வைத்திருந்தார். மர்மநபருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மர்மநபரின் நோக்கம் மற்றும் குறிக்கோள் குறித்து எவ்வித தகவலும் முழுமையாக தெரியவில்லை. எனவே விமானம் சுற்றித்திரியும் பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
விமானம் எப்போது எங்கு மோதும் என்று தெரியாத நிலையில், தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் சேவை என அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. டுபெலோ நகரத்தில் சுமார் 40,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விமானம் எங்கு மோதினாலும் கடுமையான பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். எனவே என்ன செய்வதென்று அதிகாரிகள் குழம்பிய நிலையில் இருந்துள்ளனர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

கைது
அதாவது, இந்த விமானம் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்ததில் வடக்கு MS நரகத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது செயலிழந்தது. இதன் காரணமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமானத்தை இயக்கிய மர்ம நபரும் கைது செய்யப்பட்டார். இவர் டுபெலோ பிராந்திய விமான நிலைய ஊழியர் என சொல்லப்படுகிறது. விமானம் பயணித்த பாதையை வரைபடம் காட்டியுள்ளது. இதில் விமானி இந்த விமானத்தை ஜிக்ஜாக்காக ஒரு வரைமுறையற்று இயக்கியுள்ளது தெரிய வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications