நின்று போன டிவிட்டர் டீலிங்.. பராக் அகர்வாலுக்கு மஸ்க் அனுப்பிய வார்னிங் மெசேஜ்? என்ன நடந்தது?
நியூயார்க்: டிவிட்டர் நிறுவன பங்குகளை வாங்குவதை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்த நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வாலுக்கு மிரட்டும் தொனியில் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்பட்ட இது கைவிடப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல சமூக வலைதளமான டிவிட்டரின் முழு பங்குகளையும் வாங்க இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் சொந்தக்காரரான எலான் மஸ்க் கூறியிருந்தார். இது தொழில்நுட்ப உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

டிவிட்டர்
இந்நிலையில் கடந்த ஜூலை 9ம் தேதி இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளின் முழு விவரங்களை டிவிட்டர் தரப்பில் கொடுக்கப்படாததுதான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து எலன் மஸ்க் மோசடி செய்துவிட்டார் என டிவிட்டர் தலைவர் பிரெட் டெய்லர் விமர்சித்திருந்தார்.

எலன் மஸ்க்
மட்டுமல்லாது மஸ்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். இந்நிலையில் சர்ச்சகைக்குறிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதில், டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கு மிரட்டும் தொனியில் மஸ்க் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.சுமார் ரூ.35.12 லட்சம் கோடி மதிப்பில் டிவிட்டரை வாங்குவதற்கு பேரம் பேசப்பட்ட நிலையில், அதற்கான பணப்பரிவர்த்தனை குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிஇஓ பராக்
இந்த சூழலில்தான் மஸ்க் அகர்வாலுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், "உங்கள் வழக்கறிஞர்கள் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்" என மிரட்டல் தொனியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எலன் மஸ்க் மோசடி செய்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்த குறுஞ்செய்தி கடந்த ஜூன் 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

மோதல்
இந்த குறுஞ்செய்தி தற்போது சமூக வலைதளம் மட்டுமல்லாது தொழில்நுட்ப உலகிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னதாக டிவிட்டரில் எலான் மஸ்க், "நாங்கள் கோரிய போலி கணக்குகள் குறித்தை தகவல்களை டிவிட்டர் வழங்கவில்லை. தற்போது நீதிமன்றத்தை நாடி அதனை வாங்க என்னை வற்புறுத்துகின்றனர்" என்று ட்வீட் செய்திருந்தார். மேலும், எனக்கு வழங்க மறுக்கப்பட்ட போலி கண்க்குகள் விவரங்களை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications