அணுஆயுத பேரழிவு ஏற்படும்.. உலகம் முழுக்க பாதிக்கப்படும்.. ரஷ்யா புடின் பரபரப்பு வார்னிங்.. ஷாக்
மாஸ்கோ: ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் அணு ஆயுதத் தாக்குதல்கள் உலகை அணு ஆயுதப் பேரழிவை நோக்கித் தள்ளும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ரஷ்யா கண்டனம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச சட்டத்தின் பார்வையில் சட்டவிரோதமானது. இதனால் அணுக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க அணு ஆயுதப் பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கும். இஸ்ரேல் உட்பட உலகம் முழுவதும் இதன் விளைவுகள் எதிரொலிக்கும். இது அணு ஆயுத பேரழிவை நோக்கி தள்ளும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா இஸ்ரேல் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "இஸ்ரேல் தலைவர்கள் விழித்துக்கொண்டு, ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளது.
மேலும், ஐ.நா.,வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் அணுசக்தி வளாகத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான அறிக்கையை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறி உள்ளது.
சர்வதேச அளவில் கண்டனங்கள்
பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் சில நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சந்தர்ப்பவாத காரணங்களுக்காகவும் செயல்படுகின்றன என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு வந்ததாகவும், ஈரான் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலை ரஷ்யா கடுமையாக கண்டித்தது. ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti, இந்த தாக்குதலை கடுமையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியது. மேலும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் அதிகாலை தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவுவது கவலை அளிக்கிறது. இஸ்ரேல் அரசு வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா. சாசனத்தை மீறி ஈரான் மீது இஸ்ரேல் படைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.
இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் எல்லைக்குள் அதிரடி தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளது. அவசர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானின் கோரிக்கையை ஆதரித்துள்ளன.
இஸ்ரேலின் அணு ஆயுத தாக்குதல் அபாயத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா விடுத்த எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications