வளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.. பெருகி ஓடிய அன்பு.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி

    நியூயார்க் : நியூயார்க்கின் ஓட்டிஸ்வில்லேவில் குழந்தையாக வளர்க்கப்பட்ட கரடிக்குட்டி ஒன்று பல வருடங்கள் கழித்து தன்னை வளர்த்தவரை இனம்கண்டு அவருடன் விளையாடி மகிழ்ந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஓட்டிஸ்வில்லேவில் செயல்பட்டுவரும் விலங்குகள் மையம் ஒன்றில் பல வருடங்களுக்கு முன்பு பராமரிக்கப்பட்டு வந்த சோன்யா என்ற அந்த கரடி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய காப்பாளரை இனம் கண்டுள்ளது.

    காப்பாளர் ஜோனாதன் மற்றும் கரடி இருவரும் தங்களது பழைய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். இந்த காட்சிகளின் வீடியோக்களை அந்த மையம் வெளியிட்டுள்ளது. இவை தற்போது வைரலாகியுள்ளன.

    ஒன்றாகவே நேரத்தை செலவழிப்பார்கள்

    ஒன்றாகவே நேரத்தை செலவழிப்பார்கள்

    சோன்யா குழந்தையாக இருந்தபோது, அதை பராமரித்துவந்த ஜோனாதன், அதை பாசத்துடன் பார்த்துக் கொண்டதாகவும், அதனுடன் அதிக நேரத்தை செலவழித்ததாகவும் மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    வைரலான வீடியோக்கள்

    ஓட்டிஸ்வில்லேவில் செயல்பட்டுவரும் அநாதையாக விடப்பட்ட வனவிலங்குகள் பராமரிப்பு மையம் தற்போது, சோன்யா மற்றும் ஜோனாதன் இணைந்துள்ள நிகழ்வின் 4 வீடியோக்களின் பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளன.

    மைய நிர்வாகிகள் அறிவிப்பு

    மைய நிர்வாகிகள் அறிவிப்பு

    இந்த இடைபட்ட காலத்தில் மையத்தை விட்டு எங்கும் வெளியில் செல்ல சோன்யா விரும்பவில்லை என்றும் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பழைய விளையாட்டுகளை ஆடி அசத்தல்

    பல ஆண்டுகள் கழித்து சோன்யா மற்றும் ஜோனாதன் இணைந்தாலும், சோன்யா தான் குட்டியாக இருந்தபோது ஜோனாதனுடன் இணைந்து விளையாடிய விளையாட்டுகளை மறக்காமல், தற்போது மீண்டும் விளையாடி மகிழ்ந்தது.

    அணைப்புக்கு ஏங்கிய சோன்யா

    அணைப்புக்கு ஏங்கிய சோன்யா

    சோன்யா குட்டியாக இருந்தபோது, அதன் வயிற்றில் இதமாக தடவிக் கொடுப்பாராம் ஜோனாதன். தற்போது, அதை அவர் மேற்கொள்ள மகுடிக்கு மயங்கிய பாம்பாய் சோன்யா மயங்கியது.

    அன்பின் வெளிப்பாடு

    மையத்தினரால் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோக்கள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும், கரடி மற்றும் காப்பாளரின் அன்பின் வெளிப்பாடு குறித்து தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+