நோ கமெண்ட்ஸ்.. சிம்ப்ளி வேஸ்ட்! கழுத்தறுத்த நேட்டோ.. கோபத்தில் ட்ரம்ப் விட்ட வார்த்தை! அவ்வளவு தானா?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நேட்டோ அமைப்பை குறித்து வெளியிட்ட கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை, அவர்களுக்குத்தான் நாங்கள் தேவை" என்று அவர் கடுமையாக கூறியிருப்பது நேட்டோ நட்பு நாடுகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
சமீப காலமாக மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், குறிப்பாக லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் உலக அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இந்த மோதல் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுமார் 10 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக அளவில் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி வழங்கப்படும் என ஈரான் அரசு அறிவித்தது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய டொனால்ட் டிரம்ப், நேட்டோ அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை கூறியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை பிரச்சினை பெரும்பாலும் கட்டுக்குள் வந்த பிறகு தான் நேட்டோ அமைப்பிலிருந்து உதவி எதுவும் தேவைப்படுகிறதா என்று தன்னிடம் அவர்கள் கேட்டதாகவும், ஆனால் அதற்கு பதிலளித்த தான் "எங்களுக்கு உண்மையில் உதவி தேவைப்பட்ட காலத்தில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது நிலைமை சீராகிவிட்ட நிலையில் அவர்களின் உதவி தேவையில்லை" என்று தெரிவித்ததாக கூறினார்.
டொனால்ட் டிரம்ப்
இதற்கிடையே அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவிலும் இதே கருத்தை மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு தேவைப்பட்ட நேரத்தில் நேட்டோ அமைப்பு பயனற்றதாக இருந்ததாகவும், ஒரு "காகிதப் புலி" போல செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், மேற்கு ஆசிய நாடுகளின் ஆதரவை அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டியதையும் கவனிக்க வேண்டும்.
கடல் போக்குவரத்து
குறிப்பாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல் போக்குவரத்து பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாஸ் அராக்சி
இதற்கிடையே ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருப்பது நிரந்தர முடிவு அல்ல என்றும், தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த தளர்வு தொடரும் என்றும் ஈரானின் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதியில் நிலவும் சூழ்நிலை முழுமையாக சீராகிவிட்டதாக கருத முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications