நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

300 நாட்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணம்.. ஜோ பைடனை நேரில் சந்தித்த ஜெலன்ஸ்கி.. ரஷ்யாவை வீழ்த்த யுக்தி

Google Oneindia Tamil News

நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் பைடனை சந்தித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது அமெரிக்கா மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு கவனம் பெற்றிருக்கிறது.

போர் தொடங்கி ஏறத்தாழ 300 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

 பெரிய அவமானம்! ஜி20 மாநாட்டை சீண்டாத புதின்..இடையில் உள்ளே வரும் உக்ரைன்! செம கடுப்பில் உலக நாடுகள் பெரிய அவமானம்! ஜி20 மாநாட்டை சீண்டாத புதின்..இடையில் உள்ளே வரும் உக்ரைன்! செம கடுப்பில் உலக நாடுகள்

உதவி

உதவி

ஏற்கெனவே அமெரிக்கா கோடிக்கணக்கில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த உதவியை நீடிக்க கோரிதான் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன. மேலும், ரஷ்யாவிடம் அதிநவீன போர்க்கருவிகள் இருக்கும் நிலையில், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக போரை அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்த அவர் அமெரிக்காக சென்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு உதவிகளை செய்ய இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் பிடியில் இருந்த உக்ரைன் பின்னர் விடுதலை பெற்றுக்கொண்டு தனியாக சென்றுவிட்டது. ஆனால் நாளடைவில் அமெரிக்காவின் ஆசைக்கு இணங்க நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. இது ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. காரணம் உக்ரைனிலிருந்து விளைவிக்கப்படும் தானியங்கள் ரஷ்யாவின் 27% உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் நேட்டோ ஒப்பந்தத்திற்கு உக்ரைன் சம்மதித்தால் ரஷ்யாவின் உணவு தேவையில் பலத்த அடி விழும். இரண்டாவது பாதுகாப்பு அச்சுறுத்தல்.

காரணம்

காரணம்

ஒருகாலத்தில் சோசலிச நாடாக இருந்த ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடக்கம் முதல் மோதல் போக்குகள் நீடித்து வந்தன. பின்னர் 1990களில் சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னரும் இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக முன்னாள் சோவியத் நாடுகளை தனது பிடிக்குள் கொண்டு வந்தது. இப்போது உக்ரைனை நெருங்கி இருக்கிறது. இந்த நேட்டோ ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்து போட்டுவிட்டால் அமெரிக்காவின் படைகள் உக்ரைனில் நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். எனவேதான் இதனை உக்ரைனை ரஷ்யா எதிர்க்கிறது.

 ஆதரவு

ஆதரவு

இந்த எதிர்ப்பின் ஓர் அங்கமாகதான் ரஷ்யா தனது போரை தொடங்கியது. போர் தொடங்கி ஏறத்தாழ 300 நாட்கள் ஆன நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் கூட உள்ளதையடுத்து அந்நாட்டு அதிபரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து இப்போரில் உக்ரைன் மூர்கமாக பங்கெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
As Russia's attack on Ukraine intensified, Ukrainian President Zelensky met with President Biden at the White House of the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X