சவுதியில் நடந்த டீலிங் பேச்சுவார்த்தை.. நான்கரை மணி நேரம் பேசிய ரஷ்யா - அமெரிக்கா.. கடுப்பான உக்ரைன்
நியூயார்க்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது.

எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதுவே இந்த சந்திப்பின் இலக்கு. உக்ரைன் மட்டுமன்றி.. மற்ற உலக நாடுகளும் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று இரண்டு நாட்டு தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். நான்கரை மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இதில் ரஷ்யா தனது கோரிக்கைகளை உறுதியாக வைத்துள்ளது. உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் இதில் நடந்து உள்ளன. டிரம்ப் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் இல்லாத காரணத்தால்.. ரஷ்யாவின் கையே ஓங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் மோதல்:
அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது.
ஆனால் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க டிரம்ப் விரும்பவில்லை. அவர் ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருகிறார். தேவையின்றி இந்த போரில் செலவு செய்யவும் டிரம்ப் விரும்பவில்லை.
இதையடுத்தே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர்.
கடுப்பான மற்ற நாடுகள்
உக்ரைன் இல்லாமல் உக்ரைன் பற்றி நடந்த பேச்சுவார்த்தையால் அந்நாட்டு தலைவர் செலன்ஸ்கி கடுப்பாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.
சமாதானப் பேச்சுவார்த்தையில் தங்களை சேர்த்துக்கொள்ளாததை அடுத்த ஐரோப்பிய தலைவர்கள் பாரிஸில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் டிரம்பின் செயல்பாடு பற்றி அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றால் பேச்சுவார்த்தையில் டிரம்ப் கை ஓங்கி இருக்கும்.. புடின் கையும் ஓங்கி இருக்கும்.
டிரம்பிற்கும் உக்ரைனை பெரிதாக பிடிக்காத காரணத்தால்.. உக்ரைனை அழுத்தி.. அந்த நாட்டிற்கு எதிரான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது, என்பதாக ஐரோப்பிய கண்டம் இதை கடுமையாக விமர்சனம் செய்ய்துள்ளது.












Click it and Unblock the Notifications