தீவிரவாதிகளுக்கு ஆப்கான் புகலிடமாகிவிடக் கூடாது.. யுஎன்எஸ்சி மீட்டிங்கில்.. ஐநா பொதுச்செயலாளர் பளீர்
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக செயல்பட வேண்டும், ஆப்கானிஸ்தான் மீண்டும் இருண்ட காலத்திற்கு சென்றுவிட கூடாது என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் இன்று நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் பேசி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அவசரமாக மீட்டிங் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலையில் நார்வே உள்ளிட்ட நாடுகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மீட்டிங் நடத்தப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள், தற்காலிக உறுப்பினர்கள், உறுப்பு நாடுகள் இதில் கலந்து கொண்டன.
இந்தியாதான் இந்த மாதத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நாடாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தாலிபான் குறித்தும், ஆப்கான் குறித்தும் விவாதிக்க நார்வே உள்ளிட்ட நாடுகளின் அழைப்பில் பெயரில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா கூட்டியது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சீனா
இதில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் கண்டிப்பாக கருத்து வேறுபாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் சீனா, ரஷ்யா போன்ற நிரந்தர உறுப்பு நாடுகள் தாலிபான் படைகளை ஆதரிக்கிறது. அமெரிக்க படைகள் இப்போதுதான் தாலிபான் ஒப்பந்தத்தை மதித்து ஆப்கானில் இருந்து வெளியேறி உள்ளது. இந்தியா இதில் இன்னும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்தியா இதுவரை தாலிபான்களை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. மற்ற உறுப்பு நாடுகளும் கலவையான கருத்துக்களையே கொண்டு இருப்பதால் இன்று கூட்டத்தில் ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படாது. ஆனால் இன்று கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் தொடக்கத்தில் இருந்தே தாலிபான் வெற்றிக்கும், அங்கு நிலவும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக பேசினார்.

ஐநா பொதுச்செயலாளர்
ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் தனது பேச்சில், ஆப்கானில் இருந்து பல்லாயிரம் பேர் வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களால் மக்கள் வெளியேறி வருகிறார்கள். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமை விதிகள், கஷ்டப்பட்டு மீட்கப்பட்ட பெண் சுதந்திரம் காக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் அனைவரும், குறிப்பாக தாலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

மனித உரிமை
மக்களின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும். மக்கள் பலர் வீட்டை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது. பல மாகாணங்களில் இருந்து மக்கள் காபூல் நோக்கி வந்துள்ளது. வேறு நாடுகளுக்கு செல்வதற்காக காபூலுக்கு மக்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். மக்களை காப்பதே ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து தரப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அந்நாட்டு மக்களுக்கு முறையான பாதுகாப்பு, மருத்துவம், உதவிகளை நாம் செய்ய வேண்டும்.

ஏற்க வேண்டும்
ஆப்கானிஸ்தான் அகதிகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த விதமான வெளியேற்றமும் இன்றி முறையாக எல்லா நாடுகளும் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து திகிலூட்ட கூடிய தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. பெண்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் மீண்டும் கொடுமைகள் அரங்கேற்றப்படுமோ என்ற அச்சம் எனக்கு தனிப்பட்ட வகையில் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான எந்த விதமான கொடுமைகளும் அங்கு மீண்டும் வர கூடாது.

ஆப்கான் இருண்ட காலம்
ஆப்கானிஸ்தான் மீண்டும் இருண்ட காலத்திற்கு சென்றுவிட கூடாது. நாம் உலக நாடுகள் எல்லாம் ஒருமித்த குரலில் பேச வேண்டும். ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நாம் ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டும். தாலிபான்களும் மற்ற அமைப்புகளும் ஆப்கானிஸ்தானில் சர்வதேச விதிகளை மதித்து, எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக செயல்பட வேண்டும். அங்கு அடிப்படை உரிமைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தீவிரவாதம்
ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக, புகலிடமாக மாறாத வகையில் உலக நாடுகள் ஒன்றாக செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் காக்கப்பட வேண்டியவர்கள். அந்நாட்டு மக்கள் பல காலமாக போர்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் முழு ஆதரவை கொடுக்க வேண்டும். வரும் நாட்கள் மிக மிக கடினமான நாட்கள். நாம் அவர்களை காக்க வேண்டிய கடமையில் இருக்கிறோம்.
Recommended Video

உலக நாடுகள்
மொத்த உலகமும் நம்மை உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆப்கான் மக்களின் தலைவிதியை மாற்றும், அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளே காப்பதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களை நாம் கைவிட கூடாது. அவர்களை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நம்முடைய ஆதரவும், உதவியும் தேவைப்படுகிறது.

வேறுபட்ட கருத்துக்கள்
இதில் வேறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்க கூடாது. அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அவர்களை காக்க வேண்டிய மிகப்பெரிய கடமை நம் முன்னே இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் சர்வதேச தீவிரவாதம் மீண்டும் தழைத்தோங்க நாம் அனுமதிக்க கூடாது என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் இன்று நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் பேசி உள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications