பச்சை துரோகம்.. பாகிஸ்தானில் பெரிய துறைமுகம் கட்டும் அமெரிக்கா! இந்தியாவின் முதுகில் குத்திய டிரம்ப்
நியூயார்க்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆலோசகர்கள், அரபிக் கடலில் பெரிய துறைமுகத்தை உருவாக்கி இயக்குவதற்கான திட்டத்துடன் அமெரிக்க அதிகாரிகளை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த துறைமுகம் கட்ட அமெரிக்காவின் நிதியை பாகிஸ்தான் கோரும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் பாகிஸ்தானின் அத்தியாவசிய கனிம வளங்களை அணுகுவதற்காக, பாஸ்னி நகரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. பாஸ்னி என்பது பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

பாகிஸ்தானில் புதிய துறைமுகம்
முனீர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், விவசாயம், தொழில்நுட்பம், சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறைகளில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை ஷெரீப் கோரினார்.
அப்போது இந்தத் துறைமுகத் திட்டம் சில அமெரிக்க அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது. டிரம்ப் உடனான சந்திப்பிற்கு முன்பாக இந்தத் திட்டம் முனீர் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்தத் துறைமுகம் அமெரிக்க இராணுவத் தளங்களுக்குப் பயன்படுத்தப்படாது.
வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு இந்தியாவின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 90 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பு.. உலக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதோடு இந்தியாவிற்கும் கடுமையான சில பின்னடைவுகளை ஏற்படுலாம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவும் - பாகிஸ்தானும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகி வருகின்றன.
இரண்டு நாடுகளும் மேலும் நெருக்கமாக விதமாக இந்த சந்திப்பு நடந்து உள்ளது. அமெரிக்க அரசும், பாகிஸ்தான் அரசும் ஒருமித்த குரலில் இதை, மிக முக்கியமான சந்திப்பு, பாதுகாப்பு தொடர்பான சந்திப்பு, ஒப்பந்தங்களை மேற்கொள்ள போகும் சந்திப்பு என்று குறிப்பிட்டு உள்ளனர். இதில் உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜே டி வான்ஸ் ஆகியோர் இடம்பெற்று இருந்ததும் கவனம் பெற்றுள்ளது.
மார்கோ ரூபியோதான் கடந்த வாரம் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கலாம் என்று எச்சரித்தார். அதே மார்கோ ரூபியோ இப்போது பாகிஸ்தான் உடன் கொஞ்சி குலாவ தொடங்கி உள்ளார்.
பாகிஸ்தான் அமெரிக்கா உறவு
பாகிஸ்தான் அமெரிக்கா உறவில்.. முக்கியமாக இரண்டு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான உறவின் புதிய அத்தியாயத்தை அடையும் விதமாக இந்த சந்திப்பு நடந்து உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அமெரிக்கா வெள்ளை மாளிகை வட்டாரங்கள் இதை பற்றி வெளியிட்டுள்ள சில தகவல்கள்தான்.
இந்த சந்திப்பு இரண்டு நாட்டு உறவு பற்றி மட்டுமில்லாமல் உலக அரசியல் தொடர்பாகவும் அமைந்தது. தீவிரவாத ஒழிப்பு, எல்லை பிரச்சனை, முதலீடுகள், வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது அமெரிக்கா - பாகிஸ்தான் கூடுதல் வர்த்தகம் செய்ய போகிறது. அமெரிக்கா பாகிஸ்தானில் முதலீடும் செய்ய போகிறது. இது இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
ஆசியாவில் பிடி தளரும் இந்தியா
ஆசியாவில் அமெரிக்காவிற்கு இந்தியா மட்டுமே மிக நெருக்கமான நட்பு நாடாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கை எல்லாம் சீனாவிற்கு நெருக்கமாக இருந்தது. இதில் பாகிஸ்தான் இப்போது அமெரிக்காவிற்கு நெருக்கமாகிவிட்டது. மாறாக இந்தியா அமெரிக்காவுடன் நட்பை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் மேற்கொண்ட சில முடிவுகளால் இந்தியா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் "அண்ணன் - தம்பி " என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க உறவு, தற்போது பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகில் குத்தியதற்கு ஒப்பாக இருப்பதாக பல இந்தியர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரிகளை விதித்து உள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது. அதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மேலும் 25% வரி விதித்து, ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதைக் காரணமாகக் கூறியது. இந்த வரி விதிப்புகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கியது. இதனால் இரண்டு நாட்டு உறவு மேலும் பாதித்து உள்ளது.
மாறாக, கனிம வளம் நிறைந்த மேற்கு மாகாணங்களுடன் துறைமுகத்தை இணைக்கும் ரயில்வே நெட்வொர்க்கிற்கான மேம்பாட்டு நிதியைப் பெறுவதே இதன் நோக்கம்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications