500 சதவீதம் வரி.. சம்மட்டி அடி கொடுப்போம்... இந்தியாவை நேரடியாகவே மிரட்டும் டிரம்ப் தரப்பு
நியூயார்க்: ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கும் கூடுதலாக 500 சதவீதம் வரி விதிப்போம் என்றும், மிக கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் தரப்பு எச்சரித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான மிக கடுமையான மசோதாவை கொண்டுவரப்போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். அப்படி மசோதா கொண்டுவரப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் பாதிக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபராக பதவியேற்றது முதலே மண்ணின் மைந்தர் கொள்கையை கடைபிடிக்கிறார். அத்துடன் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வர்த்தக பற்றாக்குறையை கண்டுபிடித்து அந்த நாடுகளுக்கு அதிக வரி விதிக்கிறார். இதற்காக அமெரிக்கா முதலில் என்ற கடுமையான கொள்கையை கடைபிடிக்கிறார். அமெரிக்காவிற்கு சலுகை தராத நாடுகளை குறிவைத்து பரஸ்பர வரி விதித்தார். மேலும் மாறி மாறி மோதிக்கொள்ளும் நாடுகளை, வரி விதிப்பேன் என்று மிரட்டி போரை நிறுத்தி வருகிறார்.

அந்த வகையில் 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து ரஷ்யா நாட்டின் மீது அமெரிக்கா தடை விதித்தது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. ரஷ்யாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகளை ஐரோப்பா விதித்திருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்தும் விதமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிகளை விதித்து வருகிறார்.
அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீதம் வரி விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார். இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா உடன் இந்தியா வரியைகுறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.பாசிட்டிவ்வான மாற்றங்கள் நடந்து வருகிறது.
ஆனால் டிரம்ப் புதிதாக ஒரு பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறுகையில், "குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ள இருக்கிறது.
இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்" என்றார்.
குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளார். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கூறுகையில், "அதிபர் டிரம்பும் அவருடைய குழுவும் ரஷ்யாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும். ரஷ்ய அதிபர் புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்" என்று கடுமையாக கூறினார். ஒரு வேளை 500 சதவீதம் வரி விதித்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம்












Click it and Unblock the Notifications