கெடு முடிந்ததும் வேலையை காட்டிய டிரம்ப் ! 104% வரியை உறுதி செய்த அமெரிக்கா.. சீனா என்ன செய்ய போகுதோ
வாஷிங்டன்: பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்தால் சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் சீனா தனது வரி விதிப்பை திரும்ப பெற ஒருநாள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாம்.
அமெரிக்காவை பிற நாடுகள் பயன்படுத்திக் கொண்டு வளமாக இருப்பதாகவும் இதனை அனுமதிக்க மாட்டேன் எனவும் பேசிய டொனால்டு டிரம்ப், 2 வது முறையாக அதிபரானதும் முதல் வேலையாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். அதாவது அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும் அதே அளவு வரி அந்த நாடுகளின் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்யவும் விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.

இதன்படி, எந்தெந்த நாடுகள் மீது எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை டிரம்ப் கடந்த 2 ஆம் தேதி அறிவித்தார். இதன்படி, இந்தியா மீது 26 சதவீதம் கூடுதல் வரியை விதித்த டிரம்ப், சீனாவுக்கு மீண்டும் 34 சதவீத வரிகளை விதித்தார். அமெரிக்கா, கடந்த 2-ந்தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்திய பொருட்களுக்கு 26 சதவீதமும், சீன பொருட்களுக்கு கூடுதல் 34 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. இதன்மூலம் சீன பொருட்களுக்கான வரி 54 சதவீதமாக உயர்ந்தது. இது போக பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் வரி விதித்தார். தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. உலக அளவில் வர்த்தகப் போருக்கு இது வழி வகுக்கும் என்று எச்சரித்தனர்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரியை அதிகரிக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க பொருட்களுக்கான வரி விகிதம் வரும் 10-ந்தேதி முதல் 67 சதவீதமாக உயர உள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த டிரம்ப், சீனாவுக்கு கெடு விதித்தார். அதாவது, 8-ந்தேதிக்குள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத வரிவிதிப்பை திரும்ப பெறவில்லை என்றால், ஏப்ரல் 9-ந்தேதி முதல் அமெரிக்கா, சீனா மீது 50 சதவீத கூடுதல் வரிகளை விதிக்கும்.
அது மட்டும் இன்றி சீனா, கோரிய சந்திப்புகள் தொடர்பாக அனைத்து பேச்சு வார்த்தைகளும் நிறுத்தப்படும் என்று கூறினார். ஆனால், இதையெல்லாம் சீனா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, டிரம்ப் அறிவித்தபடி சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீன பொருட்கள் மீது 104 சதவீதம் வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீனா என்ன மாதிரியான பதிலடி கொடுக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே, அமெரிக்காவுடன் எந்த வகையிலான மோதலுக்கும் தயார் என்று சீனா ஏற்கனவே கூறியது. இதனால் உலக அளவில் வர்த்தக போர் வெடித்து பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவும் சீனாவும் வரி போரில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், இதனால், சர்வதேச சந்தைகள் ஆட்டம் காணும் எனத்தெரிகிறது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications