நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. பிடன் வார்னிங்.. ராணுவம் உள்ளே புகுந்து தலையிடுமா? அடுத்தடுத்த பரபரப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய மாட்டேன். நான் தோல்வி அடைய வாய்பே இல்லை. அதையும் மீறி நான் தோல்வி அடைந்தால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்றுதான் அர்த்தம்.. இது அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன விஷயம்.

தற்போது அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருக்கும் டிரம்ப்.. இதே குற்றச்சாட்டை வைக்க தொடங்கி உள்ளார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்.. நாங்கள் வென்றுவிட்டோம்.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 இது ஏமாற்று வேலை.. நாங்கள் வென்றுவிட்டோம்.. கோர்ட்டுக்கு செல்வோம்.. டிரம்ப் பரபரப்பு பேச்சு! இது ஏமாற்று வேலை.. நாங்கள் வென்றுவிட்டோம்.. கோர்ட்டுக்கு செல்வோம்.. டிரம்ப் பரபரப்பு பேச்சு!

முறைகேடு

முறைகேடு

அதோடு ஜனநாயக கட்சி தேர்தலில் முறைகேடு செய்ய பார்க்கிறது என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார். கடந்த சில நாட்களாக டிரம்ப் பேசிய எந்த மேடையிலும், தேர்தலில் தோல்வி அடைந்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறவே இல்லை. நான் தேர்தலில் தோல்வி அடைந்தால் முடிவை ஏற்பேன், பதவியை ராஜினாமா செய்வேன் என்று டிரம்ப் கூறவில்லை. மாறாக.. ஏதாவது பிரச்சனை செய்ய டிரம்ப் தொடக்கத்தில் இருந்தே தயாராகத்தான் இருக்கிறார்.

தயார்

தயார்

இதனால் தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில்.. டிரம்ப் மட்டும் ஒரு சில எலக்ட்ரல் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்றால் பெரும்பாலும் டிரம்ப் அந்த தேர்தல் முடிவை ஏற்க மாட்டார். அதாவது 250க்கும் மேல் வாக்குகளை பெற்று டிரம்ப் தோல்வி அடைந்தார் என்றால் அந்த முடிவை அவர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ஏன்

ஏன்

தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டது, தாபல் வாக்கில் முறைகேடு நடந்துவிட்டது என்று கூறி டிரம்ப் பிடிவாதம் பிடிக்க வாய்ப்புள்ளது. தேர்தலில் நான்தான் வெற்றிபெற்றேன் என்று அறிவிக்க கூட டிரம்ப் முயல்வார். ஏன் இன்னும் ஒரு படி மேலே போய், தனக்கு லீடிங் வந்தவுடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி கூற வாய்ப்பு உள்ளது. அல்லது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுக்கவும் வாய்ப்புள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

ஒருவேளை டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்தால் ராணுவம் இதில் தலையிட வேண்டும் என்று பிடன் கோரிக்கை வைத்துள்ளார். ராணுவம் கடமையை செய்யும் என்று பிடன் கூறியுள்ளார் . ஆனால் இதில் ராணுவம் கண்டிப்பாக தலையிடாது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் அவை மூலமும், நீதிமன்றம் மூலமும் மட்டுமே தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்துவிட்டது.

ராணுவம்

ராணுவம்

இதனால் டிரம்ப் பதவி விலக மறுத்தால், காங்கிரஸ் அவை கூடி அவரை நீக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளை பிடன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து .. அதன்பின் டிரம்பை வெள்ளை மாளிகையில் இருந்து அப்புறப்படுத்த வாய்ப்புள்ளது. இல்லையென்றால் வழக்கு தொடுக்கப்படவும் கூட வாய்ப்புள்ளது. டிரம்பிற்கு எதிராக பிடன் வழக்கு தொடுக்கலாம்.

வழக்கு

வழக்கு

அதே சமயம் இன்னொரு சமயம் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிக்க தயாராக இருக்கிறார்கள். டிரம்ப் ஏதாவது செய்து தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கவும் முயற்சி செய்யலாம். தற்போது 238 எலக்ட்ரல் வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 213 வாக்குகளுடன் அதிபர் டிரம்ப் முன்னேறி வருகிறார்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இதனால் அதிபர் தேர்தலில் என்ன நடக்கும், முடிவு எப்படி வரும், அதை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை வேறு டிரம்ப் எதோ அறிவிக்க போவதாக கூறியுள்ளார்.. அவர் என்ன அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு வேறு இதனால் அதிகம் ஆகியுள்ளது.

English summary
US Presidential Election 2020: Will the army intervene If Trump doesn't accept the defeat against Biden?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X