அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தரும் பம்பர் பரிசு.. லிங்க்-16 என்றால் என்ன.. இந்தியாவிற்கு எஃப்-16 தலைவலி
நியூயார்க்: பாகிஸ்தான் தனது வசம் உள்ள 75 எஃப்-16 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் சுமார் 686 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. இது இன்றைய இந்திய மதிப்பில் 6203 கோடியாகும். இந்த ஒப்பந்த முன்மொழிவை அமெரிக்க அரசு தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றமான காங்கிரஸுக்கு அனுப்பிஇருக்கிறது.அதாவது அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. இதனை ஒரு மாத கால அவகாசத்திற்குள் நாடாளுமன்றம் அங்கீகரிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் என்பதே எதார்த்தம் ஆகும்.
அமெரிக்கா தர உள்ள சுமார் 6300 கோடியில் பாகிஸ்தான் தனது வசம் உள்ள 75 எஃப்-16 ரக போர் விமானங்களை மேம்படுத்த முடியும். சரி அப்படி என்ன தான் முக்கிய மேம்பாடு என்று பார்த்தால், பாகிஸ்தானின் அனைத்து எஃப்-16 விமானங்களுக்கும் லிங்க்-16 என்ற பாதுகாப்பான தகவல் பரிமாற்ற அமைப்பை வழங்கவே இந்த நிதியை அமெரிக்கா தர உள்ளதாம்.

லிங்க்-16 அமைப்பு எப்படி
இந்த லிங்க்-16 அமைப்பு எப்படி விமானங்களில் வேலை செய்யும் என்றால், போர் விமானங்களுக்கு இடையே தகவல்கள், இலக்குகள் மற்றும் நிகழ்நேர வீடியோக்களை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள உதவும். முன்னதாக பாகிஸ்தானின் கைவசம் உள்ள ஒரு சில விமானங்களில் மட்டுமே இந்த வசதி இருந்த நிலையில், தற்போது முழு விமானப் படைக்கும் இது கிடைக்க போகிறது..
அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன
பாகிஸ்தான் உடன் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நீண்ட காலப் பாதுகாப்புக் கொள்கைக்கு ஆதரவளிக்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு உதவும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த மேம்படுத்தல் பணிகளை எஃப்-16 விமானங்களைத் தயாரித்த நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மேற்கொள்ளும். அதாவது அமெரிக்காவை பொறுத்தவரை பணமாக தராமல் 6300 கோடி மதிப்புள்ள தொழில்நுட்பங்களை பாகிஸ்தானுக்கு தாராளமாக வழங்குகிறது. இந்த மேம்பாடுகள் பாகிஸ்தானின் எஃப்-16 விமானங்களை 2040 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பாகப் பறக்க வைக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏவுகணைகள் கிடைக்கும்
அதேநேரம் பாகிஸ்தான் அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தத்தில் நேரடியாக புதிய ஆயுதங்கள் எதுவும் சேர்க்கவில்லை.. மாறாக, பாகிஸ்தான் எதிர்காலத்தில் புதிய ஏவுகணைகளை வாங்குவதற்குத் தயாராக இருப்பதை குறிக்கும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. அதாவது எதிர்காலத்தில் புதிய ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வழங்க போகும் ஆர்டர்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்-வான் ஏவுகணைகள் மற்றும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இலக்காகக் கொண்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான ஆர்டர்களை பாகிஸ்தான் விரைவில் அமெரிக்காவிற்கு வழங்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இப்படி உதவிகளை செய்திருப்பது இந்தியாவை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. எனினும் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) இதனை ஏற்குமா அல்லது நிராகரிக்குமா என்பதை அறிந்த பின்னரே இந்தியா தனது பதிலடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications