பாதாளத்திற்கு போகப் போகிறோம்.. அமெரிக்காவின் பொற்காலம் முடிகிறது.. டிரம்ப்பிற்கு போன எச்சரிக்கை
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள உலகளாவிய வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இதன் விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.
முக்கியமாக டிரம்ப் செய்யும் ஒவ்வொரு மூவும் அதிக பணவீக்கம் ஏற்பட காரணமாக மாறி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவை அதள பாதாளத்திற்கு தள்ளுவதாக அவர் எச்சரித்து உள்ளார்.

டிரம்ப் எடுக்கும் முடிவுகள் மோசமானதாக உள்ளன. அவர் எடுக்கும் முடிவுகளை கணிக்க முடியவில்லை. அமெரிக்காவை மோசமான நிலைக்கு தள்ளும் முடிவுகளாக அவை உள்ளன. தினம் தினம் மார்க்கெட் இதனால் பாதிக்கிறது. பல கொள்கைகளின் அடிப்படைகளை அவர் மாற்றுகிறார். அதுதான் சிக்கலே. இதனால் பணவீக்கம் அதிகரிக்கிறது.
அதாவது பணத்தின் மதிப்பு குறைகிறது. இருக்கிற பணத்தை வைத்து பொருட்களை வாங்க முடியவில்லை. டாலரின் மதிப்பு வேகமாக சரிகிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். எதிர்பார்க்காத சரிவை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் நாம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்று டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.
வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனா மீது வரி
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications