யாராவது பயணம் செஞ்சா அவ்வளவுதான்.. இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு வைக்கும் அமெரிக்கா.. போச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து வெளிநாடு பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முக்கியமான பல நாடுகளுக்கு டிராவல் பேன்.. அதாவது பயணத் தடையை அறிமுகம் செய்ய பரிசீலித்து வருகிறது. மொத்தமாக 43 நாடுகளில் இருந்து வரும் மக்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் இந்த தடையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த கொள்கையானது நாடுகளை 'சிவப்பு', 'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' பட்டியல்களாக வகைப்படுத்தும், ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டிற்கு வரும்.

USA immigration may put huge pressure to green card H1B visa holders travelling to ban countries

'ரெட்' லிஸ்ட்

மொத்த விசா தடையை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும் இவை. ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இது அவர்களின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை முழுமையாக நிறுத்துவதற்கு வழிவகுக்கும். கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகியவை இந்த லிஸ்டில் அடங்கும்.

Take a Poll

கட்டுப்பாடுகள்

இந்த நிலையில்தான் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து வெளிநாடு பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதாவது கிரீன் கார்டு, எச் 1 பி விசா உள்ளவர்கள் எளிதாக மேற்கண்ட நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து செல்ல முடியாது. அப்படியே இவர்கள் வேறு நாடு வழியாக மேற்கண்ட நாடுகளுக்கு சென்று வந்தால் அவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்படும்.

அவர்களின் கிரீன் கார்டு பரிசோதிக்கப்படலாம், சமயங்களில் அவரின் பயணங்கள் சோதனை செய்யப்படலாம், வங்கி கணக்குகள் ஆய்விற்கு உட்படுத்தப்படலாம், சிலருக்கு பயணம் செய்துவிட்டு திரும்பிய பின் அந்த பயணம் பற்றி விசாரிக்கப்படலாம், தூதரக தொல்லைகள் கொடுக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கர்கள் யாரும் மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல கூடாது. அதிலும் குறிப்பாக கிரீன் கார்டு, எச் 1 பி விசா உள்ளவர்கள் மேற்கண்ட நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிரீன் கார்டு சிக்கல்

ஏற்கனவே அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்துவது, அவர்களின் கிரீன் கார்டுகளை நீக்குவது, நாடு கடத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்தியர்கள் பலர் இந்த ஆய்விற்கு உள்ளாகி வருகின்றனர்.

முக்கியமாக வயதான இந்தியர்கள் ஆய்விற்கு உட்படுகிறார்கள். சில இந்தியர்களை, நீங்கள் உங்களின் கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். இதற்காக US Custom and Border Protection (CBP) அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

வயதான இந்தியர்களை சோதனை செய்து உங்களுக்கு கிரீன் கார்டு இருக்க இனியும் தகுதி இல்லை என்று கூறி அவர்களை கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். உடனே உங்கள் கிரீன் கார்டுகளை சரண்டர் செய்யுங்கள் என்றும் பிரஷர் கொடுக்கப்படுகிறது.

கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் அப்படி சரண்டர் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் வழக்கு தொடுக்கலாம். ஆனாலும் சரண்டர் செய்யும்படி அவர்களுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறதாம். சமீபத்தில்தான் துணை அதிபர் வான்ஸ் கிரீன் கார்டு என்பது நிரந்தரமல்ல.. அதை நாங்கள் நினைத்தால் நீக்குவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+