அமெரிக்கா மிட் டேர்ம் தேர்தல் முடிவு.. செனட், பிரதிநிதிகள் சபையை வெல்ல போவது யார்? டிரம்ப் எழுச்சி?
நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரண்டு அவைகளுக்கான மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெறும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மொத்தம் இரண்டு அவைகள் உள்ளன. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் என்ற இரண்டு பலம் வாய்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

செனட் சபை
அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மொத்தம் 100 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். அதேபோல் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் 435 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். இவர்களுக்குத்தான் இப்போது தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆனால் அனைத்து செனட் சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கவில்லை. 100 பேரில் 35 இடங்களுக்குத்தான் தேர்தல் நடந்து உள்ளது. 435 பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்து உள்ளது.

கவர்னர்கள்
அதேபோல் 36 கவர்னர்கள் இந்த வருடம் தேர்வு செய்யப்படுவார்கள். எப்போதும் இந்த தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து 2 வருடத்தில் நடக்கும். 2020 ஜனவரியில் பிடன் அதிபராக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சரியாக இரண்டு வருடம் கழித்து இந்த தேர்தல் நடைபெறுகிறது. அதிபரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு கொடுக்கப்படும் மார்க் போல இந்த தேர்தல் போல இந்த தேர்தல் பார்க்கப்படும்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில்
செனட் சபை - 35 இடங்களில் 18 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 12ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 6 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 46 செனட்டர்கள், ஜனநாயக கட்சிக்கு 47 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 51 பேர் தேவை.
பிரதிநிதிகள் சபை - 435 இடங்களில் 371 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 199ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. குடியரசு கட்சி இதில் பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது. 172 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது.
கவர்னர் தேர்தல் - 36 கவர்னர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. அதில் 31 கவர்னர் பதவிகளுக்கான முடிவுகள் வந்துள்ளன. அதில் 16ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 15 கவர்னர் இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. . தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 24 கவர்னர் , ஜனநாயக கட்சிக்கு 21 பேர் உள்ளனர்.

ஏன் முக்கியம்?
இந்த தேர்தல் அதிபர் பிடனுக்கு கொடுக்கப்படும் ரேங்க் கார்ட் போல நடக்கும் தேர்தல். அதிபரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு கொடுக்கப்படும் மார்க் போல இந்த தேர்தல் போல இந்த தேர்தல் பார்க்கப்படும். இதை வைத்தே அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவாரா என்பது தெரியும். அதேபோல் பிடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்பாரா என்பதும் இதை வைத்தே உறுதி செய்யப்படும். இதனால் இன்றைய தேர்தல் முடிவுகள் அதிகம் கவனம் பெறுகிறது.











Click it and Unblock the Notifications