எவ்வளவு சீரியஸான விஷயம்? தப்பான நேரத்தில் சிரித்து மாட்டிக்கொண்ட கமலா ஹாரிஸ்.. வெடித்த சர்ச்சை!
நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தப்பான நேரத்தில் தேவையின்றி சிரித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து இருக்கிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், சுமி, மரியாபோல், கார்கிவ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
முக்கியமாக மரியாபோல் விரைவில் ரஷ்யா வசம் செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் தலைநகர் கீவையும் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கமலா ஹாரிஸ்
இந்த நிலையில்தான் உக்ரைன் ரஷ்யா போர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் சந்திப்பில் போலந்து அதிபர் டுடா உடன் கமலா ஹாரிஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு என்ன மாதிரியான உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்.

போலந்து
அமெரிக்கா இதற்காக என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்று கேட்டார். அதேபோல் போலந்து அதிபரிடமும் இதே கேள்வியை அந்த செய்தியாளர் வைத்தார். ஆனால் இந்த கேள்விக்கு கமலா ஹாரிஸ் பதில் அளிக்காமல் போலந்து அதிபர் டுடாவை பார்த்தார். போலந்து அதிபர் டுடா இதற்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்து கமலா ஹாரிஸ் அவரை பார்த்தார்.

கமலா ஹாரிஸ்
ஆனால் டுடா இதற்கு பதில் அளிக்காமல் கமலா ஹாரிஸ் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து அங்கேயே வெடித்து சிரித்த கமலா ஹாரிஸ்.. பதில் அளிக்காமல் சில நிமிடம் சிரித்துக்கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் போலந்து அதிபர் டுடாவும் கமலா ஹாரிஸை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார். அதன்பின் கமலா ஹாரிஸ்.. ஆபத்தில் கைகொடுப்பான் தோழன்.. அதனால் நானே இதற்கு பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

மீட்பு
இதையடுத்து அமெரிக்கா போலந்து இரண்டு தரப்பும் இணைந்து உக்ரைன் அகதிகளுக்கு உதவிகளை செய்யும் என்று கமலா ஹாரிஸ் மற்றும் டுடா தெரிவித்தனர். அகதிகள் பற்றிய சீரியஸான கேள்வி ஒன்றுக்கு கமலா ஹாரிஸ் இப்படி சிரித்தபடி பதில் சொன்னது பெரும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். பலர் உணவு இன்றி கஷ்டப்படுகிறார்கள்.

எங்கே செல்வது
பலர் எங்கே செல்வது என்று தெரியாமல் கடுமையாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பற்றிய கேள்விக்கு இப்படி கமலா ஹாரிஸ் சிரித்துக்கொண்டு இருக்கலாமா என்று அமெரிக்கா குடியரசுக் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அவரின் இந்த வீடியோவை பகிர்ந்து அமெரிக்க நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications