நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டைட்டானிக் மாதிரியே.. ஐஸ் மீது மோதிய ராட்சச கப்பல்.. பதறிய பயணிகள்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -வீடியோ

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் கப்பல் ஒன்று கடலில் ஐஸ் பாறை மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    டைட்டானிக் மாதிரியே.. ஐஸ் மீது மோதிய ராட்சச கப்பல்.. பதறிய பயணிகள்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -வீடியோ

    1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது.

    52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.

    டைட்டானிக் கப்பல்

    டைட்டானிக் கப்பல்

    இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் கப்பல் ஒன்று கடலில் ஐஸ் பாறை மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நார்வாவை சேர்ந்த க்ரூஸ் கப்பல் ஆகும் இது.

    அலாஸ்கா

    அலாஸ்கா

    நார்வேவில் இருந்து 9 நாள் பயணமாக இந்த கப்பல் அலாஸ்காவின் ஹப்பார்ட் கிளேசியர் நோக்கி வந்துள்ளது. இந்த நிலையில் அலாஸ்கா நெருங்கிய போது கப்பல் அங்கு இருந்த பனிப்பாறைகள் மீது மோதி உள்ளது. டைட்டானிக் கப்பல் போலவே பனிப்பாறைகளில் இது மோதியது. ஆனால் இந்த பாறைகள் மீது கப்பல் மோதிய போது உள்ளே இருந்த பயணிகள் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்று இருந்தனர்.

     பாறையில் மோதியது

    பாறையில் மோதியது

    எல்லோரும் இறுக்கமாக அருகில் இருந்த கம்பிகளை பிடித்துக்கொண்டு இருந்த போது அந்த கப்பல் ஐஸ் பாறைகள் மீது மோதியது. இதில் கப்பலின் முன் பக்கம் நெளிந்தது. முன்பக்கம் பெரிதாக நெளிந்தது. இதனால் கப்பலில் துளை ஏற்படுமோ என்ற அச்சத்தில் எல்லோரும் இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கு துளையும் ஏற்படவில்லை. அதே சமயம் ஐஸ் பாறைகளை துளைத்துக்கொண்டு கப்பல் சென்றுள்ளது.

    துளைத்தது

    துளைத்தது

    ஐஎஸ் பாறைகள் கொஞ்சம் வலிமை குறைவாக இருந்ததால் கப்பல் அதை உடைத்து நொறுக்கிக்கொண்டு சென்றது. எனவே அதிர்ஷ்டவசமாக கப்பல் உடையவில்லை. இதனால் அங்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கப்பல் முன் பக்கம் நெளிந்து காணப்பட்டது. இதனால் அந்த பயணம் பாதுகாப்பு கருதி பாதியில் நிறுத்தப்பட்டது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    பின்னர் அருகில் இருந்த Juneau துறைமுகத்திற்கு கப்பல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு சோதனை செய்யப்பட்ட கப்பல், மீண்டும் சரி செய்யப்பட்டு சியாட்டலுக்கு மேற்கொண்டு பழுது பார்ப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. அதே சமயம் திரும்பி செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஐஸ் பாறைகள் மீது மோதிய வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன.

    English summary
    Video: Alaska ship smashes into a iceberg, what happened next will blow your mind? அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் கப்பல் ஒன்று கடலில் ஐஸ் பாறை மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X