இந்த கொடூரத்தை பாருங்க.. இந்தியர்கள் உட்பட பலர் அசிங்கப்பட்டதை.. கொண்டாடும் வெள்ளை மாளிகை!
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அதிகாரமற்ற குடியேறிகளை கை, கால்களில் விலங்கு கட்டி அழைத்து செல்கின்றனர். இந்த விவகாரத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை போஸ்ட் செய்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
சரியாக மோடி அமெரிக்காவில் இருந்த அதே நேரத்தில் டிரம்ப் இந்தியர்களை நாடு கடத்தி உள்ளார் என்பதுதான் இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.
ASMR வீடியோ
பொதுவாக காதுக்கு இதமான சத்தங்களை.. பார்ப்பதற்கு இதமான, மென்மையான, அழகான விஷயங்களை ASMR வீடியோ என்று அழைப்பார்கள். பல இதமான, அழகான விஷயங்களுக்கு ASMR என்று குறிப்பிட்டு பகிர்வது வழக்கம்.
இப்போது அதே ASMR என்று குறிப்பிட்டு வெள்ளை மாளிகை போஸ்ட் ஒன்றை பகிர்ந்து உள்ளது. அந்த போஸ்டில், இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் வெளியேற்றம் செய்யப்படும் வீடியோவை பகிர்ந்து உள்ளனர். அதில் சட்டவிரோத குடியேறிகள் கை, கால்களில் விலங்கு போடும் காட்சிகள் பகிரப்பட்டு உள்ளது. அவர்களுக்கு விலங்கு போடும் முன் அதை தயார் செய்வதற்கான காட்சிகளும் இதில் இடம்பெற்று உள்ளது.
ஏன் சங்கிலி
அமெரிக்கா போர் விமானத்தில் இவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். விதிப்படி போர் விமானம் உள்ளே இருக்கும் வரை அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
அவர்கள் சட்டப்படி அமெரிக்காவில் அத்துமீறி குடியேறியவர்கள். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எனவே அவர்களுக்கு விலங்கு போடுவது கட்டாயம்.
விதிப்படி போர் விமானம் உள்ளே இருக்கும் வரை அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பதால் தரையிறங்கும் வரை அவர்கள் விலங்கு பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.
ASMR: Illegal Alien Deportation Flight 🔊 pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
இதை எப்படி தடுப்பது
இதை தடுக்க ஒரே வழி இந்தியா விமானங்களை அனுப்புவது. இந்திய அரசு சார்பாக விமானங்கள் அனுப்பப்பட வேண்டும்.
குடியேறிகளை வெளியேற்ற முடிவு செய்த பின்.. இந்தியா விமானங்களை அனுப்பி அவர்களை அழைக்க வேண்டும்.
கொலம்பியா அரசு அவர்கள் குடிமகன்கள் அவமானப்படாமல் இருக்க இந்த வழியையே பின்பற்றுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளது. இப்படி கை, கால்களை கட்டிய பின்பே 48 மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் நாடுகடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டு வரலாற்றில் அமெரிக்காவால் இவ்வளவு மோசமான அவமானம் நேர்ந்ததே இல்லை. அப்படி ஒரு அவமானம் இன்று நேர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications