தாய்ப்பால் தந்த பெண்.. ஆக்ரோஷமாக கத்திய "முடியில்லாத" பூனை.. நடுவானில் பரபரப்பு
பூனைக்கு தாய்ப்பால் தந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
நியூயார்க்: விமானத்தில் பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுக்க போய், கடைசியில் அந்த விவகாரம், விமான தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரும்வரை சென்றுவிட்டது..!
அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. டெல்டா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து, ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிற்கு சென்று கொண்டிருந்துள்ளது.
அதில் ஏராளமான பயணிகள் உட்கார்ந்திருந்தனர்.. அப்போது பெண் பயணி ஒருவர், திடீரென தான் துணியில் மூடி வைத்திருந்த செல்லப்பிராணியான பூனைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார்..

பயந்துவிட்டனர்
இதனால் அந்த பூனை திடீரென கத்த தொடங்கி உள்ளது.. நேரம் ஆக ஆக பூனையின் சத்தம் அதிகரித்தது.. ஒருகட்டத்தில் ஆக்ரோஷமாக கத்த ஆரம்பிக்கவும், சக பயணிகள் பயந்துவிட்டனர்.. அதனால் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று அந்த பெண்ணிடம் சொல்லி உள்ளனர்.

பூனை
தன்னுடைய செல்ல பிராணி என்பதால் தாய்ப்பால் தராமல் இருக்க முடியாது என்று அவர்களிடம் வாதம் செய்துள்ளார்.. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் புகார் சொன்னார்கள்.. அவர்களும் வந்து, தாய்ப்பால் தர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.. அவர்கள் பேச்சையும் இந்த பெண் காதில் வாங்காமல் இருந்துள்ளார்.

தரைக்கட்டுப்பாட்டு பிரிவு
இதனால் கடைசியில் விமானத்தை ஓட்டி கொண்டிருந்த பைலட்களிடம் சென்று புகார் சொல்லப்பட்டது.. அதற்கு பிறகு விமானிகள், தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் தகவல் பரிமாற்றம் மூலம் புகார் தந்துள்ளனர்.. இவ்வளவும் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே நடந்துள்ளது.. இறுதியில் அட்லாண்டா ஏர்போர்ட்டுக்கு ஃபிளைட் வந்து சேர்ந்தது..

பரபரப்பு
அப்போது ஏற்கனவே தயாராக காத்து கொண்டிருந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் தெரிந்தது, அந்த பூனைக்கு முடியே இல்லையாம்.. ஒரு துணியால் போர்த்தி சுற்றிவைத்து கொண்டிருந்திருக்கிறார்.. தன்னுடைய குழந்தையாகவே அந்த பூனையை அவர் பாவித்து வந்துள்ளார் என்று அந்த ஃபிளைட்டில் இருந்தவர்கள் சொல்கிறார்கள்.. ஒரு பூனைக்காக நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications