மிக கன மழை, மண் சரிவுக்கு வாய்ப்பு.. மீட்பு பணிக்கு 3025 பேர் குவிப்பு.. உஷார் நிலையில் நீலகிரி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், 3025 பேர் மீட்பு பணி மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரிய சாகு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் மற்றும் வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கன மழை எச்சரிக்கை
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியவர், நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மண் சரிவு
283 இடங்கள் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 450 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டால் அதை சரி செய்ய தேவையான இயந்திரங்கள் இருப்பதாகவும் , அணைகளில் தற்போது 70 சதவீதம் அளவிற்கு தண்ணீர் நிரம்பி வருவதாகவும் அதை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுப்ரியா சாகு தெரிவித்தார். தேவைகேற்ப மீட்பு பணிகள் மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழு அளிக்கப்படும் என்றார்.

விமானங்கள்
வெள்ள நீரால் சென்னை ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில், இன்று பெய்து வரும் கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம்
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் பக்கிங்ஹாம் கால்வாயின் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. வண்டிப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் நடுக்குப்பம், கோட்டிக்குளம் உள்ளிட்ட 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications