கூடலூர் ஷாக்.. ஆற்றில் ஒதுங்கிய சடலம்.. மீட்க சென்ற வீரர்.. காத்திருந்த அதிர்ச்சி
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதை மீட்கச் சென்ற போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட உடல், தீயணைப்பு வீரர் பாலாவின் தந்தை ராமசாமி என்பது அப்போது தான் தெரியவந்தது. தந்தையின் சடலத்தைக் கண்டு தீயணைப்பு வீரர் கதறி அழுதார்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கோலிபாலப்பகுதியில் வாழ்ந்தவர் ராமசாமி. இவர் அண்மையில் வெளியூருக்கு போய் வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

உடல் மீட்பு
இந்நிலையில், கோலிபாலப்பகுதியில் உள்ள புன்னங்குள ஆற்றில் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கதறி அழுதார்
அப்போது இறந்தவர் சடலத்தை பார்த்து யார் இவர் என்று விசாரணை செய்து கொண்டிருந்த போது, தீயணைப்பு வீரர் பாலா, இவர் தனது தந்தை ராமசாமி என்று கதறி அழத்தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தீயணைப்பு வீரர்கள் பாலாவிற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர்.

சோகத்தில் கிராமம்
பின்னர் போலிஸார் ராமசாமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். வெளியூர் செல்வதாக கூறிச் சென்றவர் எப்படி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கோலிபாலம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி பலி
கோவை நரசிபுரம் விராலியூர் கிராமத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.குறிப்பாக ஒற்றை யானைகள் மனிதர்களை கண்டால் விடுவதில்லை. இந்த நிலையில் வனத்துறையினர் அதிகாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

காவல் பணி
இப்படியிருக்க கோவை நரசிபுரம் அருகிலுள்ள விராலியூர் கிராமத்தில் யானை தாக்கி விவசாயி சின்னச்சாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் நேற்று இரவு ஆட்டுக்காரன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் காவல் பணியில் இருந்த போது இன்று அதிகாலை அங்கு வந்த ஒற்றை யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications