நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊட்டியில் கொட்டிய மழை.. நிலச்சரிவு.. அந்தரத்தில் தொங்கிய வீடுகள்.. நூலிழையில் உயிர்தப்பிய மக்கள்

Google Oneindia Tamil News

நீலகிரி: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் சென்னை நீரில் மிதக்கும் அளவுக்கு அதிகனமழை வெளுத்து கட்டியது.

 ப்பா என்னங்க இது.. ஒரே மரத்தில் 3 பாம்புகள் படம் எடுத்த காட்சி.. வைரலாகும் வீடியோ! ப்பா என்னங்க இது.. ஒரே மரத்தில் 3 பாம்புகள் படம் எடுத்த காட்சி.. வைரலாகும் வீடியோ!

தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியும் 3 நாட்களாக வெளுத்து கட்டிய பலத்த மழை காரணமாக வெள்ளக்காடானது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் தற்போதும் மழை விட்டபாடில்லை.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இப்போது கொங்கு மண்டல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கோவையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதேபோல் திருப்பூர், தாராபுரம், பல்லடம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் நீலகிரியிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

உதகையில் கொட்டி தீர்த்த மழை

உதகையில் கொட்டி தீர்த்த மழை

உதகையில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது இதனால் நகரில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தால் சேதங்கள் ஏற்பட்டன. உதகையில் மட்டும் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இந்த கனமழையால் உதகை நகரிலுள்ள குமரன் நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

அந்தரத்தில் தொங்கிய வீடுகள்

அந்தரத்தில் தொங்கிய வீடுகள்

இதனால் அந்த பகுதியில் இருந்த வீடுகள் அந்தரத்தில் தொங்கின. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். இதனால் பெரும் சேதம் தவிரிக்கப்பட்டது. ஆனால் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபாதையும் முற்றிலும் சேதம் அடைந்ததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

மக்கள் கோரிக்கை

மக்கள் கோரிக்கை

நீலகிரியில் ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் பொழுது இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இது பல நேரங்கில் பொருள் இழப்பை உண்டாக்கி விடுகிறது. மண்சரிவை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. உயிர்ச் சேதம் ஏற்படும் முன் தடுப்பு சுவர் அமைத்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

English summary
The landslide occurred due to heavy rains in Ooty in the Nilgiris district. Thus the houses hung in the distance. The civilians immediately fled the house and survived
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X