என்னாச்சு விழுந்து உடைஞ்சிருச்சா...எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் விபத்து காட்சிகள் சிக்கியது
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியபோது சுற்றுலா பயணிகள் அதை படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை விமானப்படை உறுதி செய்யவில்லை
நீலகிரி: பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்பாக தடுமாற்றத்துடன் பறந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளது. பனிமூட்டம், தெளிவற்ற சூழல் காரணமாகவே விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன ஆச்சு கீழே விழுந்து உடைஞ்சிருச்சா என சுற்றுலா பயணிகள் பேசும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கோவை சூலூரிலிருந்து வெலிங்டன் ராணுவதளத்துக்கு எம்.ஐ.17V-5 ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் 14 பேர் நேற்று பயணம் செய்தபோது திடீரென விபத்து நிகழ்ந்தது.
எம்.ஐ.17V-5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டேரி வனப்பகுதி
குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமுக்கு சென்றபோதுதான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. வெலிங்க்டன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

கருகிய உடல்கள்
விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அவர்கள் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது எனவே உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

தீவிர சிகிச்சை
விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மரத்தில் மோதி விழுந்தது
வனப்பகுதி முழுவதும் கடும் பனிமூட்டமான சூழல் நிலவிய நிலையில், இதன் காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கீழே விழுந்திருச்சா
இதனிடையே கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் தடுமாற்றதுடன் பறந்து சென்றதை படம் பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் என்ன ஆச்சு கீழே விழுந்துருச்சா என்று கேட்பதும் பதிவாகியுள்ளது.

நிபுணர்கள் ஆய்வு
குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடம் மொத்தமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர்
விபத்தில் சிக்கிய எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டராக பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டராக இருந்தாலும் ஒவ்வொருமுறையும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய ஹெலிகாப்டர். உலகின் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications