முதல்முறையாக புலியை தேடி... களமிறக்கப்பட்ட சிப்பிப்பாறை நாய் பற்றி ஆச்சர்யம் தரும் உண்மைகள்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேடி கண்டுபிடிக்க சிப்பிபாறை நாய் முதல்முறையாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த நாய் எப்படிப்பட்ட குணம் உடையவை.புலியை கூட எதிர்த்து நிற்கும் இவற்றின் போர் குணங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
Recommended Video
பொதுவாக தமிழர்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியத்துடன் ஜல்லிக்கட்டு காளை போல் ஒன்றியவை நாட்டு நாய்கள். வீட்டுக்குள் வரும்போது நம்மைப் பார்த்தது குறைத்துக்கொண்டே வாலை ஆட்டிக்கொண்டே நம் மீது ஏறி பிரியத்தை வெளிப்படுத்துபவை நாய்.
உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருந்தாலும், அவற்றில் 350 வகை இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. அதில் 7 வகை, இந்திய நாய்களாகும். இதில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமாகும். இந்த நான்கு நாய்களுமே வீரம் நிறைந்தவை.

நாய் எப்படி
இதில் நாம் பார்க்க போது சிப்பிப்பாறை முன் காலத்தில் முயல், மான், பன்றி வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன. சிப்பிப்பாறை நாய் பார்ப்பதற்கு அழுக்குவெள்ளை, சாம்பல், மங்கிய பழுப்பு நிறமாகவும் கால்கள் பிரவுன் நிறத்திலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக்கும். ஒரு நடுத்தர அளவு நாய், இவை 25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் இருக்கும். எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும் இதன் உடல் அமைப்புதான் வேகமாக பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது.

எங்கு வளர்க்கிறார்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலுடன் ஒன்றுபட்டவை. அந்த மக்கள் சிப்பிப்பாறை நாய்களை வீட்டில் ஒருவராகவே எண்ணி வளர்த்து வருகிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் வளர்க்கிறார்கள். நாய்கள் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. மதுரை அருகே சிப்பிப்பாறை என்ற பகுதியில் அந்த பகுதி மன்னர்களால் இனம்பெருக்கம் செய்யப்பட்டவை என்பதால் சிப்பிப்பாறை என்று அந்த நாய்களுக்கு பெயர் வந்தது.

வேட்டை நாய்
இந்த நாய்கள் வீட்டுக்காவலுக்கு மட்டுமின்றி பெரிய பண்ணைகள், தோட்டங்களில் காவலுக்காகவும், அத்துமீறி நுழையும் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளை விரட்டுவதற்காகவும் வளர்க்கப்படுகிறது. புலிகளை பார்த்து பயப்படாமல் சண்டைக்கு செல்லும் அளவுக்கு வீரம் மிகுந்தவை சிப்பிப்பாறை நாய்கள். முயல்களைவிட வேகமாக ஓடக்கூடியவை சிப்பிப்பாறை நாய்கள். அதாவதுமணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய நாய்களில் ஒன்று சிப்பிப்பாறை. மனிதர்களுடன் பாசத்துடன் பழகும் இந்த சிப்பிப்பாறை நாய்கள், தனது எஜமான் ஒரு குரல் கொடுத்தால் உடனே ஓடிவந்துவிடும்.

மோப்ப சக்தி
சிப்பிப்பாறை நாய்களின் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன. இதன் முடியின் நீளம் குறைவாக உள்ளதால் இவை தெள்ளுப் பூச்சிகளை எளிதாக புரண்டு படுத்து உதிர்க்கின்றன. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்லோகி, அல்லது ராம்பூர் வேட்டை நாய்களை மிகவும் ஒத்ததாக இருக்கிறது. எனவே கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேட சிப்பாறை நாய் ஒன்று களம் இறக்கப்பட்டுள்ளது. அதீத மோப்ப சக்தி உ டைய இந்த நாய் புலியை தேடும் பணியை தொடங்கி உள்ளது.

வனத்துறை
புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் புலியின் நடமாட்டத்தை கண்டறிய களம் காண சிப்பிபாறை இன 8 மாத வயது பெண்நாய் களம் இறக்கப்பட்டுள்ளது. நாட்டு இன நாய் ஒன்று புலி கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்..
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications