ஊட்டி போலீஸ் ஸ்டேசனில் மீட்க வந்த போது ட்விஸ்ட்.. வாகனத்தின் நிலையை கண்டு ஆடிப்போன விவசாயி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் தனது சரக்கு வாகனத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கள்ளச்சாராய ஊறல் எடுத்து சென்றதாக வழக்கில் சிக்கினார். அப்போது போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாகனம் ஊட்டி அருகே உள்ள புதுமந்து போலீஸ் நிலையத்தில் 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி, வாகனத்தை மீட்க வந்த நாகராஜ், வாகனம் இருந்த கோலத்தை பார்த்து ஆடிப்போனார். ஏனெனில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாகனத்தின் உதிரிபாகங்கள் மாயமாகி இருந்தது.
காவல் நிலையங்களில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் சில நேரங்களில் உதிரிபாகங்கள் மாயமாகி இருக்கும். உதரி பாகங்கள் துருப்பிடிப்பது ஒருபுறம் எனில், சமூக விரோதிகள் யாராவது கழற்றி சென்றுவிடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பது உண்டு. அப்படித்தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது சரக்கு வாகனத்தில் கள்ளச்சாராய ஊறல் எடுத்து சென்றுள்ளாராம். அந்த சாலையில் சோதனை செய்து கொண்டிருந்த ஊட்டி அருகே உள்ள புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் வாகனம் பறிமுதல் செய்தனர். அவரது சரக்கு வாகனம் புதுமந்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைத்தனர்.
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தனது வாகனத்தை வழக்கில் இருந்து விடுவித்து திரும்ப தரக்கோரி நாகராஜ் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில்,, வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு அபராதம் செலுத்துமாறு போலீஸ் தரப்பில் நாகராஜிடம் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நாகராஜ் ரூ.17,110 அபராதமாக செலுத்தினார்கள்..
இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த சரக்கு வாகனத்தை எடுத்து செல்ல நாகராஜ் தன்னுடன் மெக்கானிக்கை அழைத்து சென்றுள்ளார். அப்போது வாகனத்தில் பல உதிரிபாகங்கள் மாயமாகி இருந்ததை கண்டு ஆடிப்போனார். பின்னர் அவர் வாகனத்தின் சாவியை மீண்டும் காவல் நிலையத்தில் கொடுத்து விட்டு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விவசாயி நாகராஜ் கூறும் போது, கொரோனா காலகட்டத்தில் தண்ணீர் பிடிக்க வாகனத்தில் குடங்களை வைத்திருந்தேன். அப்போது புதுமந்து போலீசார் சாராய ஊறல் இருப்பதாக கூறி வாகனத்தை பறிமுதல் செய்தார்கள். தற்போது போலீசார் அறிவுறுத்தல்படி, ரூ.17,110 அபராதமாக செலுத்தி வாகனத்தை எடுக்க சென்றேன்.
அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த எனது வாகனத்தில் கியர் பாக்ஸ், டயர், ஸ்பீடாமீட்டர், செல்ப் மோட்டார், பேட்டரி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதிரி பாகங்கள் திருடு போயிருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications