வாட்.. தலையே சுற்றுதே.. ஒரு விநாடிக்கு இரண்டு பேருக்கு பரவுகிறதாம் கொரோனா.. உறைந்துபோன பிரான்ஸ்
பாரீஸ்: கொரோனா பாதிப்பு மீண்டும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாகப் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சில முக்கிய தரவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்டா கொரோனா பாதிப்பே இன்னும் முடியாத நிலையில், இப்போது ஓமிக்ரான் பாதிப்பு அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓமிக்ரான் தீவிர கொரோனா பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் கூட டெல்டா கொரோனாவை விடக் குறைந்தது 3 மடங்கு வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் அது சுகாதார கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் கொரோனாவுக்கு முன்னதாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஓமிக்ரானுக்கு பின்னர், நிலைமை மோசமாகிவிட்டது என்றே கூறலாம். பிரான்ஸ் நாட்டில் கடந்த புதன்கிழமை மட்டும் 2.08 லட்சம் பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ் சுனாமி போலப் பரவி வருவதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

தலையே சுற்றுகிறது
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கொரோனா பாதிப்பு இந்த மின்னல் வேகத்தில் பரவி இதுவரை நாங்கள் கண்டதில்லை. இதைப் பார்க்கும் போது தலையே சுற்றுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பிரான்ஸ் தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை சமயத்தில் பொதுமக்கள் எந்த காட்டுப்பாடும் இல்லாமல் வெளியே சுற்றுவது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கொரோனா சுனாமி
பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனைகளில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. டெல்டா கொரோனா இங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பலருக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஓமிக்ரான் பாதிப்பு வரும் காலத்தில் தான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதை எதிர்கொள்ளவும் நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரான்ஸில் தற்போது கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

நொடிக்கு இருவருக்குப் பாதிப்பு
இப்போது நமக்கு ஓமிக்ரான் மற்றும் டெல்டா என இரண்டு எதிரிகள் உள்ளன. இவை இரண்டும் பல அலைகள் ஒன்றிணைந்து ஒரு மிகப் பெரிய கொரோனா அலையை ஏற்படுத்துகிறது. பிரான்ஸ் நாட்டில் இப்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
Recommended Video

கட்டுப்பாடுகள்
பிரான்ஸ் நாட்டில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் பல புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே அந்நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூட பிரான்ஸில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கட்டுப்பாடுகள் போதியளவில் இல்லை என்றும் இதனால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications