3 நாட்களில் 3 நாடுகள்! பிரான்ஸில் பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்து வரவேற்ற அதிபர் மேக்ரான்
பாரிஸ்: ஐரோப்பியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் பயணத்தை முடித்துக்கொண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக கடந்த மே 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரதமர் ஓலாம் ஷோல்சை சந்தித்த நரேந்திர மோடி, இந்தியா - ஜெர்மனி இடையிலான 6 வது கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மோடி டென்மார்க்கில் இருக்கும்போதே.. “இந்தியாவில் இன அழிப்பு

டென்மார்க்கில் மோடி
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் அழைத்தன் அடிப்படையில் அந்நாட்டின் கோபன்ஹேகன் நகருக்கு சென்ற அவர் 2 நாட்கள் தங்கி இருந்தார். டென்மார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட நிகழ்வில் தங்களை அனுமதிக்கவில்லை எனக் கூறி அவரை சுற்றி வளைத்த பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டி கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

ஓ மை காட்
இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி, ஓ மை காட் என்று சொல்லி இந்தியில் 2 வார்த்தைகளை சொல்லிவிட்டு நகர்ந்தார். பிரதமர் மோடியின் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் ஓ மை காட் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாடு இருந்த நிலையில் இதனை வைத்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பிரான்ஸ் சென்ற மோடி
இதற்கிடையே டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றடைந்தார். விமானத்திலிருந்து இறங்கிய மோடியை, அண்மையில் தேர்தலில் வென்று பிரான்ஸில் 2 வது முறையாக அதிபராக பொறுப்பேற்ற இம்மானுவேல் மேக்ரான் கைகொடுத்தும் கட்டிப்பிடித்தும் வரவேற்றார்.

இந்தியர்கள் வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக தேசிய கொடியோடு ஏராளமான பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் காத்திருந்தனர். அவர்களின் கரகோஷங்களுக்கு மத்தில் கையசைத்த பிரதமர் மோடி சிலரிடம் அருகில் சென்று பேசினார். அப்போது சிலருக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். பிரான்ஸில் நடைபெற இருக்கும், இந்தியா - நார்டிக் நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இருக்கிறார்.

இந்தியா - நார்டிக் மாநாடு
இந்த மாநாட்டில் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார நிலை, பருவநிலை மாறுபாடு, கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், புதுபிக்கக்கூடிய ஆற்றல், ஆர்டிக் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
Recommended Video

இருநாட்டு பேச்சுவார்த்தை
இந்த பயணத்தின்போது டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற சிறப்பு பரிசுகளை அவர்களுக்கு வழங்கினார். இந்த மாநாட்டை தொடர்ந்து பிரான்ஸ் அதிபருடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேசவுள்ளார் பிரதமர் மோடி.