எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு!
நாங்கள் புதிய இந்தியாவை வேகமாக உருவாக்கி வருகிறோம், எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது என்று பிரதமர் மோடி பிரான்சில் பேசி இருக்கிறார்.
Recommended Video
பாரீஸ்: நாங்கள் புதிய இந்தியாவை வேகமாக உருவாக்கி வருகிறோம், எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது என்று பிரதமர் மோடி பிரான்சில் பேசி இருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடி தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனை சந்தித்தார். இந்த நிலையில் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் பேசினார்.

என்ன பேசினார்
பிரதமர் மோடி தனது பேச்சில், புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். நான் இப்போது கால்பந்து விளையாடும் மக்களின் தேசத்தில் இருக்கிறேன். கோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும். கோல் எடுப்பதுதான் கால்பந்து வீரருக்கு ஒரே குறிக்கோள். எங்களுக்கும் அப்படித்தான் முக்கியமான கோல் நிறைய இருக்கிறது.

எப்படி ஆட்சி
கடந்த 5 வருடங்களில் நாங்கள் பல இலக்குகளை அடைந்து இருக்கிறோம். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் உயிர் துறந்த மக்களுக்கும், சாதனையாளர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய இந்தியா எப்படி
நாங்கள் வெற்றிபெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். எங்கள் புதிய இந்தியாவில் வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல், குடும்பம் அரசியல், திருட்டு, மக்கள் பண முறைகேடு, தீவிரவாதம் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

சிறப்பு
இதற்கு முன் நாங்கள் எந்த அரசும் இந்தியாவில் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டது கிடையாது. கடந்த 75 நாட்களில் இந்தியாவில் நாங்கள் பல அதிரடி விஷயங்களை நிறைவேற்றி இருக்கிறோம், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications