சுடுகாட்டில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை.. அழுகுரல் கேட்டு ஓடிய பெண்கள்.. அப்புறம் நடந்தது என்ன?
பாட்னா: பீகார் மாநிலத்தில் சுடுகாட்டில் அழுகுரல் கேட்ட நிலையில் விறகு சேகரித்த பெண்கள் பேய் என அலறியடித்து ஓடிய நிலையில் கிராம மக்களுடன் திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது.
பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கோப்பா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ஹா நதி ஓடுகிறது.
இந்த நதியோரம் சுடுகாடு ஒன்று உள்ளது. இதன் அருகே ஏராளமானவர்கள் விறகு சேகரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அழுகுரல் கேட்டு பேய் என ஓட்டம்
அதன்படி சம்பவத்தன்று சில பெண்கள் விறகு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது சுடுகாட்டில் இருந்து அழுகுரல் ஒன்று கேட்டது. பேய் குரல் என நினைத்த அந்த பெண்கள் விறகை போட்டுவிட்டு அருகே உள்ள கிராமத்துக்கு ஓடினர். அங்கு நடந்த சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து சம்பவ இடத்துக்கு சென்றனர்.

குழந்தை மீட்பு
அப்போதும் அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்கும் திசையை நோக்கி சென்ற மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மண்ணை கிராம மக்கள் அகற்றி பார்த்தனர். அப்போது 3 வயது குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டு இருந்ததும், குழந்தையின் வாயை களிமண்ணால் மூடியிருந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை
உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் பெயர் லாலி என்பதும்ம், அவர்களின் பெற்றோர் பெயர் ராஜூ ஷர்மா-ரேகா என்பதும் தெரியவந்தது.

குடும்பத்தினரை தேடும் போலீஸ்
மேலும் குழந்தையை அவரது தாய் ரேகாவும், அவரது தாயும் சேர்ந்து உயிருடன் புதைத்தது தெரியவந்தது. இந்த வேளையில் குழந்தை அழுததால் வாயை களிமண் கொண்டு அடைத்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இருப்பினும் குழந்தையை எதற்காக அவர்கள் உயிருடன் புதைத்தனர் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி குழந்தையின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications