பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் தேர்தலில் ஜேடியு - ஆர்ஜேடி இடையே நீயா நானா போட்டி - மாறும் அரசியல் வானிலை

பீகார் சட்டசபை தேர்தல் ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை வகிக்க்கின்றன.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார் என்று ஆளும் ஜேடியு தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே நீயா நானா போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை காலையில் ஆர்ஜேடி கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் அதன்பிறகு நிலைமை மாறியது. பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களான 122 தொகுதிகளையும் விட அதிக இடங்களில் ஜேடியு கூட்டணி முன்னணி வகித்தது.

Bihar Election Final Results 2020 : With NDA at 120, Mahagathbandhan at 115

ஜேடியு - ஆர்ஜேடி இடையே 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 31 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. 101 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கும், ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு வாக்கு வித்தியாசங்கள் 5000 என்கிற அளவில் உள்ளதால் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவுகிறது.

183 இடங்களில் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும் போது 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. 228 தொகுதிகளில் 20ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசம் உள்ளது. பீகார் சட்டசபைத் தேர்தலைப் பொருத்தவரை எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம் அரசியல் வானிலை எப்படி வேண்டுமானாலும் மாறாலாம் என்பதால் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன் - தேர்தல் ஆணையம் விளக்கம்பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன் - தேர்தல் ஆணையம் விளக்கம்

தற்போதைய நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை வகிக்க்கின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களிலும், பிஎஸ்பி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

பீகார் சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார் என்று ஆளும் ஜேடியு தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே நீயா நானா போட்டி நிலவுகிறது. முடிவுகள் தெரியவர நள்ளிரவாகிவிடும் என்பதால் இன்றைக்கு பீகார் மாநிலத்தில் அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சிவராத்திரியாகத்தான் இருக்கப் போகிறது.

ஆளும் கட்சி, எதிர்கட்சி தவிர தேர்தலில் வெல்லும் சுயேச்சைகள், ஓரிரு இடங்களில் வெல்லப்போகும் கட்சிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கப் போகிறது என்பது உறுதி.

English summary
Bihar Election Final Results 2020 LIVE Updates: With NDA at 120, Mahagathbandhan at 115, Others, Independents can play kingmaker in Bihar assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X