பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடும் கோபம்.. பீகாரில் விழுந்த விக்கெட்! இலாகா மாற்றத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எம்எல்சி!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் கடத்தல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் இலாகா மாற்றியதால் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் எம்எல்சி கார்த்திகேய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்தது. நிதிஷ் குமார் முதல்வராக இருந்தது. இந்த கூட்டணிக்குக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி முறிந்தது.

பாஜக உடனான கூட்டணியை முறித்த நிதிஷ் குமார் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ப பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து மீண்டும் முதல்வரானார்.

பீகார்: பாஜக, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் போராட்டம்.. சபாநாயகர் ராஜினாமா.. பரபரத்த பாட்னா! பீகார்: பாஜக, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் போராட்டம்.. சபாநாயகர் ராஜினாமா.. பரபரத்த பாட்னா!

நிதிஷ் குமார் அமைச்சரவை

நிதிஷ் குமார் அமைச்சரவை

நிதிஷ் குமார் முதல்வர் ஆன நிலையில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். இதையடுத்து சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாததளம், காங்கிரஸ் உள்பட பல கட்சியினர் அங்கம் வகிக்கின்றனர். இதில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மேல்சபை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

சட்டத்துறை அமைச்சரால் சர்ச்சை

சட்டத்துறை அமைச்சரால் சர்ச்சை

இந்நிலையில் கார்த்திகேய சிங் மீது கடத்தல் புகார் எழுந்தது. அவர் கடத்தல் வழக்கில் ஆஜராகாமல் அமைச்சராக பதவியேற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனை பாஜகவினர் கடுமையாக கண்டித்தனர். மேலும், கார்த்திகேய சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இலாகா மாற்றம்

இலாகா மாற்றம்

இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனையை சமாளிக்கும் வகையில் காத்திக்கேய சிங்கின் இலாகா மாற்றப்பட்டது. அவரது சட்டத்துறை பறிக்கப்பட்டு கரும்பு தொழில்துறை வழங்கப்பட்டது.

சில மணிநேரத்தில் ராஜினாமா

சில மணிநேரத்தில் ராஜினாமா

இதனால் கார்த்திகேய சிங் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை முதல்வர் நிதிஷ் குமாரிடம் வழங்கினார். இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது பதவியை கார்த்திகேய சிங் ராஜினாமா செய்தது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

English summary
Rashtriya Janata Dal MLC Karthikeya Singh has resigned from his ministerial post due to his transfer of portfolios in connection with the kidnapping case in Bihar, causing political chaos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X