பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆடைகளை கிழித்து.. ஆபாசமாக பேசி! இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை! ஹைகோர்ட் வழக்கறிஞர் கைது

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஒருவர் தன்னிடம் இன்டர்ன்ஷிப்புக்காக வந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அம்மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா உயர்நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருபவர்தான் நிரஞ்சன் குமார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் அவரிடம் இன்டர்ன்ஷிப்புக்காக 22 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சேர்ந்திருக்கிறார். இந்த மாணவியை இவரே இன்டர்ன்ஷிப்பில் சேர வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மாணவியும் கடந்த 1ம் தேதி பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். ஆனால் பயிற்சியில் எவ்வித நுணுக்கங்களையும் நிரஞ்சன் குமார் சொல்லிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், பயிற்சியை கடந்து சில உரையாடல்களை நிரஞ்சன் குமார் வலிந்து திணித்திருக்கிறார்.

இரு கட்சிகளும் மதுவை ஒழிக்கப் போவது இல்லை.. பாமக 2.0 மாற்றத்திற்கான திட்டம்.. அன்புமணி ராமதாஸ்!இரு கட்சிகளும் மதுவை ஒழிக்கப் போவது இல்லை.. பாமக 2.0 மாற்றத்திற்கான திட்டம்.. அன்புமணி ராமதாஸ்!

பலாத்கார முயற்சி

பலாத்கார முயற்சி

இரவு நேரங்களில் அடிக்கடி போன் செய்வது, நள்ளிரவு கடந்தும் மெசேஜ் அனுப்பவது என அவர் வேறு ஒரு கோணத்தில் மாணவியை அனுகியுள்ளார். ஆனால் இதற்கு மாணவி பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறு இருக்கையில் இன்டர்ன்ஷிப்பின் கடைசி நாளும் வந்துள்ளது. அன்று இவர் தனது விருப்பத்தை மாணவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மாணவி இணங்கவில்லை. எனவே அன்று நாள் முழுவதும் மாணவிக்கு ஏராளமான பணிகளை கொடுத்துள்ளார். சரி கடைசி நாள்தானே என்று எண்ணி மாணவியும் எதுவும் சொல்லாமல் கொடுத்த பணியை செய்து முடித்துள்ளார். இறுதியாக வழக்கறிஞர் நிரஞ்சன் குமார் அன்று மாலை மாணவியை தனது அறைக்கு அழைத்திருக்கிறார்.

கைது

கைது

அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி உடனடியாக அந்த அறையிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். அவர் மீது, ஐபிசி பிரிவு 341, 342, 354, 354 ஏ, 354 பி மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, "சம்பவம் நேற்று நடந்திருக்கிறது. வழக்கறிஞர் நிரஞ்சன் குமார் அலுவலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அலறல்

அலறல்

இதில் மாணவியின் உடைகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்லாது பாலியில் பலாத்காரம் செய்ய முயன்றதற்கான அடையாளங்களும் பதிவாகியுள்ளன. அலுவலகத்தில் நாங்கள் சோதனையிட்டபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி விழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அவர் மாணவி மீது திருட்டு பழியை கூறியுள்ளார். இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்ததில் மாணவி அலறியுள்ளது தெரிய வந்திருக்கிறது. ஆக நிரஞ்சன் குமார் பலாத்காரம் செய்ய முயன்றிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து இருக்கிறோம். இதேபோல வேறு ஏதேனும் பெண்களிடம் இவர் அத்து மீறியுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

கண்டனம்

கண்டனம்

எனவே இதற்கு முன்னர் இவரிடம் பயிற்சி பெற்ற பெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பெயர் பட்டியல் தயாரானவுடன் அப்பெண்களிடத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தரக்கூடிய வழக்கறிஞர்களே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A lawyer of the Patna High Court in the state of Bihar tried to rape a 22-year-old law student who had come to him for an internship. Following this, the lawyer was arrested on the complaint filed by the woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X