பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராம்விலாஸ் பஸ்வான் உடல் அரசு மரியாதையுடன் தகனம்...மயங்கி விழுந்த மகன் சிராக் பஸ்வான்!!

Google Oneindia Tamil News

பாட்னா: மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல் அரசு மரியாதையுடன் பாட்னாவில் அடக்கம் செய்யப்பட்டது. சிதைக்கு தீ மூட்டிய பின்னர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கங்கை ஆற்றங்கரையில் திகா காட் பகுதியில் பஸ்வானின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Ram Vilas Paswan funeral with all full government respect; Chirag Paswan fainted

அரசியலில் 1960 ஆம் ஆண்டுகளில் காலில் காலடி எடுத்து வைத்து ஆறு பிரதமர்களை கண்டவர் ராம்விலாஸ் பஸ்வான். இவரது மரணத்தால் தலித் சமுதாயம் மட்டுமின்றி பீகார் மக்கள் மிகப்பெரிய அரசியல் தலைவரை இழந்துள்ளனர்.

பஸ்வான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹாஜிபூர் தொகுதியில் இருந்து பெரிய அளவில் பஸ்வானின் ஆதரவாளர்கள் இன்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். 1977ஆம் ஆண்டில் இருந்து இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வந்தவர் பஸ்வான். கடந்தாண்டு இந்த தொகுதியை தனது சகோதரர் பசுபதி குமார் பரஸ்க்கு விட்டு கொடுத்து, ராஜ்ய சபா வாயிலாக நாடாளுமன்றத்துக்கு வந்தார் பஸ்வான்.

பீகார் அரசியலில் தனக்கு எதிரி இல்லை என்றளவுக்கு நட்பை வளர்த்துக் கொண்டு இருந்த பஸ்வானின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் கண்ணீர் வடித்து பஸ்வானை வழி அனுப்பி வைத்தனர். டெல்லியில் வியாழக் கிழமை இரவு இறந்த இவரது உடல் பாட்னா கொண்டு வரப்பட்டது. கட்சி தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்திய எல்லையில் சீனா 60,000 வீரர்கள் குவிப்பு.. அமெரிக்க உதவியை கேட்கிறது இந்தியா- மைக் பாம்பியோஇந்திய எல்லையில் சீனா 60,000 வீரர்கள் குவிப்பு.. அமெரிக்க உதவியை கேட்கிறது இந்தியா- மைக் பாம்பியோ

இதையடுத்து இன்று அரசு மரியாதையுடன் இவரது உடலுக்கு அவரது மகன் சிராக் தீ மூட்டினார். அப்போது சிராக் மயங்கி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்த அவரது உறவினர்கள் தாங்கிப் பிடித்து தூக்கினர். தொடர்ந்து தூக்கம் இல்லாமல், நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தால் சிராக் மயக்கம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கு முன்னதாக டெல்லியில் வைக்கப்பட்டு இருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்.

English summary
Ram Vilas Paswan funeral with all full government respect; Chirag Paswan fainted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X