பீகார் அமைச்சரவையில் குடும்ப அரசியல்.. 10 அமைச்சர்களின் பகீர் பின்னணி.. லிஸ்ட் வெளியிட்ட தேஜஸ்வி
பாட்னா: நாடே உற்று கவனித்த பீகார் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள பீகார் அமைச்சரவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பீகார் அமைச்சரவையில் உள்ள 10 பேர் வாரிசு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி கட்சி தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி ஒரு பக்கமும், தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் கூட்டணி மறுமுனையிலும் போட்டியிட்டனர். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரும் களத்தில் இருந்தார். கடந்த வாரம் வெளியான தேர்தல் முடிவுகளில் நிதிஷ் - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளனர்.

பீகார் தேர்தல்
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது தேசியளவில் பேசு பொருளானது. காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் பணி மூலம் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கி முறைகேடு செய்துள்ளனர். அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது." என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதற்கு நிதிஷ் - பாஜக கூட்டணி, "ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியில் குடும்ப அரசியல் நிலவுகிறது. இதனை மக்கள் விரும்பவில்லை. லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் இடையே ஏற்பட்ட சகோதர யுத்தம், குடும்ப அரசியலை மக்கள் ரசிக்கவில்லை. அதன் காரணமாக தான் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்துள்ளனர்." என்று பதிலடி கொடுத்தனர்.
அமைச்சரவையில் குடும்ப அரசியல்
இந்நிலையில் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்று கொண்டனர். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் எங்களை குடும்ப அரசியல் என்று விமர்சித்துவிட்டு, புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 10 பேர் வாரிசு மற்றும் குடும்ப உறவுகள் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "குடும்ப அரசியலில் இருந்து விலகி பீகாரை புதிய உயரத்திற்கு அழைத்து செல்வோம் என்றனர். அவர்களின் அமைச்சரவையிலேயே குடும்ப உறுப்பினர்களின் தாக்கம் இருக்கிறது. முன்னாள் துணை முதல்வர் சந்தோஷ் சுமன் மான்ஜி, சாம்ரத் செளத்ரி, அசோக் சௌத்ரி ஆகியோரின் குடும்ப உறவுகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
10 வாரிசுகள்
முன்னாள் அமைச்சர் உபேந்திரா குஸ்வா மகன் தீபக் பிரகாஷ் அமைச்சராக பதவியேற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் மஹ்வீர் சௌத்ரி மகன் அசோக் சௌத்ரியும் அமைச்சராகியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய் நாராயன் நிஷாத் மருமகள் ராமா நிஷாத் அமைச்சரவையில் உள்ளார். ராமா நிஷாத் கணவர் முன்னாள் எம்பி அஜய் நிஷாத் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட அமைச்சரவையில் உள்ள 10 பேர் வாரிசு இடம் பெற்றுள்ளனர்." என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications