வாயோடு வாய் வைத்து.. குரங்கின் உயிரை காப்பாற்றிய பெரம்பலூர் இளைஞர்.. வைரல் வீடியோ..குவியும் பாராட்டு
பெரம்பலூர்: பெரம்பலூரில் மயக்க நிலையில் இருந்த குரங்குக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.
Recommended Video
சாலையோரத்தில் மனிதர்கள் உடல்நிலை முடியாமல் மயங்கி கிடந்தால் போதையில் விழுந்து கிடக்கிறார்கள் என தவறாக நினைத்து நெருங்காமல் போகும் உலகம் இது!. இந்த தவறான புரிதலால் எத்தனையோ உயிர்கள் பறி போயுள்ளன.
அது போல் சாலை விபத்தில் அடிபட்டு கிடந்தாலும் அவர்களை காப்பாற்றாமல் போலீஸ், கேஸ் என வந்தால் என்ன செய்வது என அஞ்சி அப்படியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வீடியோ எடுக்கும் காலம் இது!

விலங்குகள்
இப்படிப்பட்ட உலகில் மனிதர்கள், விலங்குகள் என அடிப்பட்டாலும் இன்னலுக்குள்ளாகியிருந்தாலும் காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த பரபரப்பான சூழலிலும் சக மனிதர்கள் விலங்குகளுக்கு செவி கொடுத்து உதவும் வீடியோ வைரலாகி வருகிறது.

38 வயது மதிக்கத்தக்க ஒருவர்
38 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது மயக்கத்தில் இருந்த ஒரு குரங்கை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நமக்கென என செல்லாமல் , அதன் அருகே செல்கிறார். அப்போது குரங்கின் நெஞ்சை அழுத்தி அழுத்தி அதன் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்.

மனிதர்கள்
இது போன்று சிகிச்சைகள் மனிதர்களுக்கு கொடுப்பர். அதே போல் நெஞ்சில் கை வைத்து அழுத்தி பார்த்தும் பலனிக்கவில்லை. இதனால் அவர் தளரவில்லை. மீண்டும் முயற்சிக்கிறார். அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து தனது மூச்சுக் காற்றை அதன் உள்ளே செலுத்துகிறார். உடனே குரங்கு உயிர் பிழைக்கிறது.

அன்பு
இதனால் மகிழ்ச்சி அடைகிறார் அந்த நபர். குரங்கையும் ஒரு உயிராக நினைத்து அவர் பல முறை முயற்சித்தது அவர் அனைத்து ஜீவராசிகள் மேலும் வைத்துள்ள அன்பையே காட்டுகிறது. இந்த நபரை பலர் பாராட்டி வருகிறார்கள். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிறது வரலாறு. அப்படிப்பட்ட குரங்கிற்கு மறுபிறவியை மனிதன் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications