தொட்டால் உதிரும் பெரம்பலூர் குடிசைமாற்றுவாரிய வீடுகள்: ஆட்சியர் ஆய்வு - ரூ.2 கோடி நிறுத்தி வைப்பு
பெரம்பலூரில் தொட்டால் உதிரும் கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாருக்கு கொடுக்க வேண்டிய கடைசி பில் தொகை 2 கோடி ரூபாய்க்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்: சென்னை புளியந்தோப்பு குடியிருப்புகளை அடுத்து பெரம்பலூரில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளும் தொட்டால் உதிர்ந்து விழுகின்றன. குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகளில் உள்ள பழுதை எவ்வளவு நாட்கள் ஆனாலும் சீரமைத்து தருமாறு குடிசைமாற்றுவாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா உத்தரவிட்டுள்ளார். கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாருக்கு கொடுக்க வேண்டிய கடைசி பில் தொகை 2 கோடி ரூபாய்க்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டன. ரூ.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கட்டப்பட்ட வீடுகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டும் குடியிருக்க அவர்கள் வருவதற்குள் பல்வேறு வீடுகள் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சி கலவைகள் உதிர்ந்து சேதம் அடைந்துள்ளது. படிகளும் உடைந்துள்ளன. இதனால் குடியிருக்கும் மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்து உள்ளது.
மேலும் ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என்று பணம் கட்டிய நிலையில், இதுபோன்ற தரமற்ற வீடு கட்டி கொடுக்கப்பட்டிருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவையான தண்ணீர், மின்சார வசதி ஆகியவை முறையாக வழங்கப்படாமல் குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பு கட்டடங்கள் அங்குள்ள கல் குவாரி அருகே கட்டப்பட்டுள்ளது. இதனால் கல்குவாரி மூலம் ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தபோது திறந்து வைக்கப்பட்ட இக்கட்டிடத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, குடிபுகுந்து ஆறு மாதத்திற்குள் கட்டிடம் பழுதடைந்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். கைவைத்தாலே சீமெண்ட் பூச்சுகள் உதிர்வதாகவும் தாங்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பான செய்தி தனியார் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி திருச்சி கோட்ட குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அழகுபொன்னையா,மேற்பார்வை பொறியாளர் வசந்தகுமார் ஆகியோர் புகாருக்குள்ளான குடியிருப்பை ஆய்வுசெய்தனர். அங்கு குடியிருப்போர் அதிகாரிகளை வீடு வீடாக அழைத்து சென்று பார்வையிடுமாறு அழைத்து சென்று காண்பித்தனர்.
சேதமடைந்தும் காணப்பட்ட பகுதிகளையும் கைவைத்தாலே மணல் மணலாக உதிரும் பூச்சுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு குறிப்பெடுத்து சென்றனர். இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியாநேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். வீடு வீடாக சென்று பயனாளிகளிடம் என்ன என்ன குறைகள் இருக்கிறது என்று கேட்டறிந்தார். அவரிடம் பேசிய குடியிருப்புவாசிகள் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது போன்ற குறைபாடுகளை தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா குடியிருப்பு பகுதியிலேயே மெயின்டனன்ஸ் அலுவலகம் தினமும் செயல்பட்டு எவ்வளவு நாட்கள் ஆனாலும் பழுதுகளை சீரமைத்து தருமாறு உத்தரவிட்டார். குடிசைமாற்று அதிகாரிகள் மற்றும் மெயின்டனன்ஸ் பார்க்கும் பணியாளர்கள் தொடர்பு எண் ஆகியவற்றை குடியிருப்பு வாசிகளுக்கு தெரியும் படி எழுதிவைக்கவும் உத்தரவிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ஆய்வில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டு,அவற்றை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து பேசிய குடிசைமாற்றுவாரிய அதிகாரி அழகுபொன்னையா, ஒப்பந்ததாருக்கு கொடுக்க வேண்டிய கடைசி பில் தொகை 2 கோடி ரூபாய்க்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களின் தரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள குடிசைமாற்று வாரியத்தினால் கட்டப்பட்ட குடியிருப்புகளும் மக்கள் வசிக்க தகுதியற்றதாக உள்ளது என்பது குடியிருப்பாளர்களின் குற்றச்சாட்டாகும்.
தமிழ்நாடு முழுவதும் ஏழைகளுக்காக கட்டித்தரப்பட்டுள்ள பல குடியிருப்புகள் இன்றைக்கு வசிக்க தகுதியானவையாக மாறி பாழடைந்து கிடக்கின்றன. ஏழைகளுக்கு கட்டித்தரப்படும் வீடுகளில் மட்டும் தரத்தை குறைத்துக்கொண்டு அவர்களின் உயிர்களில் விளையடுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications