பாலியல் “வக்கிரம்”.. சீறிய மாணவிகள்! விளையாட்டு விடுதியில் பயங்கரம் - பெரம்பலூரில் பயிற்சியாளர் கைது
பெரம்பலூர்: மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதியில் மாணவிகளிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டு வந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி பயிற்சி டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகின்றனர்.
அங்குள்ள பயிற்சியாளர் தர்மராஜன், கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, மது போதையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்வது, தவறான முறையில் பாரப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்.

மாணவிகள் புகார்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் அளித்து உள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மாணவிகள் மாவட்ட நீதிபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி புகார் மனு அனுப்பினர்.

விளையாட்டு அலுவலர்
மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிட்டார். ஆனால், சுரேஷ்குமார் மாணவிகளை மிரட்டி இது குறித்து புகார் தெரிவிக்க வேண்டாம் எனவும், சில்மிஷம் எதுவும் நடைபெறவில்லை என வாக்குமூலம் பெற்று அறிக்கை தயார் செய்து பயிற்சியாளர் தர்மராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபடவில்லை என கலெக்டரிடம் அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார்
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட சட்ட நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் கடந்த 3 ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது புகாரில் உண்மை இருப்பதை கண்டறிந்ததன் அடிப்படையில் பேரில் டேக்வாண்டோ பயிற்றுநர் தர்மராஜ், விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போக்சோ சட்டம்
இதனை அடுத்து அவர்கள் மீது கடந்த 7 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் அரியலூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். விளையாட்டு துறை மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜான்சுசிலா தலைமையிலான விசாரணை குழுவினர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும், அரசு மகளிர் விளையாட்டு விடுதிக்கும் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

சுரேஷ்குமார் சஸ்பெண்ட்
இந்த விசாரணை அறிக்கையை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் கார்த்திகேயனுக்கும் அனுப்பினர். இதன் பேரில் விளையாட்டு விடுதி மாணவிகள் அளித்த புகாரின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்தும். தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜனை பணியில் இருந்து நீக்கியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பு
இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி பெரம்பலுர் மாவட்ட விளையாட்டு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட லெனின் தற்போது அரியலூர் மாவட்டத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார். தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளராக பரணி தேவி புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தலைமறைவான டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜை நேற்று பெரம்பலூர் போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவு நீதிபதி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications